|
நற
நற்குணக்கடலான இறைவன்
விஷயத்தில்1 ஓர் அஞ்ஞானம் தொடருகிறபடி சொல்லுகிறார் இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது முன்னர்க் கூறியதற்கு முரணாகாதோ?’ எனின், 2மேலே கர்மங் காரணமாக
வரக்கூடிய அஞ்ஞானம் இல்லை என்றார்; 3இங்குத்தை அஞ்ஞானத்துக்கு அடி, விஷய வைலக்ஷண்யமாயிருக்கும்.
4நித்தியசூரிகளுக்கும் உள்ளதொரு சம்சயமாகும் இது. 5சொரூபத்திலே கட்டுப்பட்டதாயிருப்பதொரு
சம்சயமாகையாலே சொரூபமுள்ளதனையும் நிற்பதொன்றேயன்றோ இது? ஆதலின், முரணாகாது.
மேல் திருவாய்மொழியில்,
6திருமலையை அனுபவித்துக் கொண்டு வந்தவர், 7‘வடமாமலையுச்சியை’ என்னுமாறு
போன்று, 8திருமலையில் ஒரு பகுதி என்னலாம்படியாய், கற்பகத்
____________________________________________________
1. ‘கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே
கட்டுரையே’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி, ‘ஓர் அஞ்ஞானம் தொடருகிறபடி சொல்லுகிறார் இத்
திருவாய்மொழியில்,’
என்கிறார்.
2. ஹேது பேதத்தாலே முரணாகாமையைக்
காட்டுகிறார், ‘மேலே
கர்மங்காரணமாக’ என்று தொடங்கி.
3. இங்குத்தை - இவ்விடம்,
4. ‘ஹேது பேதம் ஆனாலும்
அஞ்ஞானம் தியாஜ்யம் அன்றோ?’ என்ன,
அதற்கு விடையாக ‘நித்திய சூரிகளுக்கும்’ என்று தொடங்கி
அருளிச்
செய்கிறார். இவ்விடத்தில்,
‘ஆங்கார வாரம் அதுகேட்டு
அழலுமிழும்
பூங்கார் அரவணையான்
பொன்மேனி - யாங்காண
வல்லமே யல்லமே மாமலரான்
வார்சடையான்
வல்லரே யல்லரே
வாழ்த்து.’
(நரன்மு. திருவந். 10.)
என்ற பாசுரம் நினைவு
கூர்க.
5. ‘தியாஜ்யம் என்று சொல்லித்
தவிர்கிறோம் என்றாலும், தவிர முடியாதது’
என்கிறார், ‘சொரூபத்திலே’ என்று தொடங்கி.
6. மேல் திருவாய்மொழிக்கும்
இத்திருவாய்மொழிக்குமுள்ள
பொருட்டொடர்பினை அருளிச்செய்கிறார், ‘திருமாலையை
அனுபவித்துக்கொண்டு
வந்தவர்’ என்று தொடங்கி.
7. பெரிய திருமொழி, 7.
10 : 3.
8. “திருமலையில் ஒரு பகுதி
என்னலாம்படி’ என்று தொடங்கும்
வாக்கியத்தால், சரம பர்வமான திருமலையாழ்வார் அனுபவத்தை விட்டுப்
பிரதம பர்வமான அழகரை அனுபவிப்பான் என்?’ என்ற ஐயமும்
நீக்கப்படுகிறது.
|