பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
1

ஸ்ரீ

மூன்றாம் பத்து

முதல் திருவாய்மொழி - ‘முடிச்சோதி’

முன்னுரை

    ஈடு : 1முதற்பத்தால், பகவத் கைங்கரியம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்: இரண்டாம்பத்தால், அந்தக் கைங்கரியத்தில் களை அறுத்தார்: களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கரியமானது பாகவத சேஷத்துவ பரியந்தமான பகவத் கைங்கரியம் என்கிறார் இம்மூன்றாம் பத்தால்.

    2பொருளென்றிவ் வுலகம் படைத்தவன் புகழ்மேல் மருளில் வண்குருகூர் வண்சடகோபன்’ என்று ‘அவனுடைய கல்யாண குணவிஷயமாக அஞ்ஞானம் இல்லை’ என்றார் மேல் திருவாய்மொழியில்: அக்குணங்கள் நிறைந்திருக்கின்ற

____________________________________________________

1. முதற்பத்துக்கும் இரண்டாம் பத்துக்கும், இரண்டாம் பத்துக்கும் மூன்றாம்
  பத்துக்கும் உள்ள சம்பந்தத்தைத் தெரிவிக்கத் திருவுள்ளம் பற்றி முதல்
  மூன்று பத்துகளின் கருத்துகளைத் தனித்தனியே அருளிச்செய்கிறார்,
  ‘முதற்பத்தால்’ என்று தொடங்கி. இங்ஙனமே, மேலேயுள்ள மற்றைப்
  பத்துகளுக்கும் சம்பந்தம் அருளிச்செய்வர். இதனால், இத்திருவாய்மொழி
  பொருளானும் தொடர்ந்து செல்கின்ற பொருட்டொடர்நிலைச் செய்யுளும்
 
ஆகும் என்பது போதரும். ‘பொருளினும் சொல்லினும் இருவகை தொடர்
  நிலை’ என்பது தண்டியலங்காரம்.

2. ‘மருளில் வண்குருகூர் வண்சடகோபன்’ என்றதனைக் கடாக்ஷித்து,
  ‘அஞ்ஞானம் இல்லை என்றார்’ என்கிறார்.