பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
220

New Page 2

வேண்டாத தந்தையாய் இருப்பான். தானுமாய் - தாய்தந்தையர்கள் போகட்டுப் போன அன்றும் ‘நான் ஜீவிக்கவேணும்; எனக்கு நன்மை உண்டாக வேணும்’ என்று அன்றோ தான் இருப்பது? இப்படித் தனக்கு நன்மை பார்க்கும் தானுமாய்.

    தந்தையானவன் தாயாகமாட்டான்: தாயானவள் தந்தையாகமாட்டாள்; இவர்கள் இருவரும் இவன்தான் ஆகமாட்டார்கள்; இவன்தான் இவர்கள் இருவரும் ஆகமாட்டான். இவர்கள் எல்லாருமாய் இறைவன் இருக்கின்றானாதலின் இறந்தது தழீஇய எச்சவும்மை கொடுத்துத் ‘தானுமாய்’ என்கிறார்; ‘தஞ்சமாகிய தந்தை, தஞ்சமாகிய தாய், தஞ்சமாகிய தான்’ என்று எல்லா இடத்திலும் தஞ்சம் என்றதனைக் கூட்டுக. ‘தாயும் தமப்பனும் வேண்டுமாகில், தஞ்சம் இன்றிக்கே ஒழிகின்றார்கள்: தான் தனக்குத் தஞ்சம் அன்றோ? ‘தஞ்சமாகிய தானும்’ என்று ஓதியது என்?’ என்னில், ‘அன்று; 1‘இறைவனை வணங்கும் பொருட்டே விசித்திரமான இந்தச் சரீரத்தை உண்டுபண்ணினான்’ என்கிறபடியே, சர்வேசுவரன் இவனுக்குக் கை கால் முதலிய அவயவங்களைக் கொடுத்துவிட்டால், 2‘அந்நாள் நீ தந்த ஆக்கையின்வழி உழல்வேன்’ என்கிறபடியே, 3தீய வழியிற் செல்லுகின்றவன் அன்றோ? ஆகையாலே, தனக்குத்தான் தஞ்சம் அல்லன்.

    அவை அல்லனாய் - தந்தை, தாய், தான் என்னும் இவ்வளவு அன்றிக்கே 4‘தாயும் தந்தையும் உடன் பிறந்தவனும் இருப்பிடமும் காப்பவனும் நட்டோனும் பேறும் ஆகிய எல்லாம் நாராயணனே,’ என்றும், ‘தந்தை தாய் மகன் உடன் பிறந்தவன் மனைவி நட்டோன் இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு பலத்தின் பொருட்டு; கேசவன் எல்லா லாபத்தின்பொருட்டு,’ என்றும்
_____________________________________________________

1. விஷ்ணு தத்துவம்.

2. திருவாய். 3. 2 : 1.

3. ‘விஷயப் பிராவண்யம் முதலியவற்றால் தானே தனக்கு அழிவினைத்
  தேடிக்கொள்பவன் ஆகையாலே, தான் தனக்குத் தஞ்சமல்லன்;
  சிற்றின்பத்தில் ஈடுபடாதபடி இவனை நோக்குகையாலே ஈஸ்வரனே
  தஞ்சமாவன் என்று இவனை நோக்க இறைவனுக்குண்டான
  வேறுபாட்டினைக் காட்டும் பொருட்டுத் ‘தஞ்சமாகிய’ என்று அடை
  கொடுத்து ஓதினார்’ என்றபடி.

4. சுபாலோபநிடதம்