பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
221

செ

சொல்லுகிறபடியே, எல்லா உபகாரகனும் எல்லாவித உறவும் அவனே அன்றோ? ‘இப்படி இருக்கிறவன் யார்?’ என்னில், எஞ்சல் இல் அமரர் குல முதல் - பகவானுடைய அனுபவத்தில் குறைவில்லாத நித்தியசூரிகள் கூட்டத்துக்கு நிர்வாஹகனை. இதனால், நித்தியசூரிகள் ஜீவனத்திற்குக் காரணமாயுள்ளவன் என்பதனைக் குறிப்பித்தபடி.

    1
மூவர்தம்முள்ளும் ஆதியை - மூவர் தாம் தியானிக்கின்ற காரணப் பொருளை; ‘காரணமாயுள்ளவன் தியானிக்கத்தக்கவன்’ என்பது மறைமொழி. இனி, ‘பிரஹ்மன், உருத்திரன், இந்திரன் இவர்கட்கும் உள்ளுயிராய் நிர்வாஹகனுமானவனை’ என்னுதல். இனி, ‘மூவரிலும் வைத்துக்கொண்டு முதன்மையனானவனை’ என்னுதல். இனி, ‘மூவரிலும் வைத்துக்கொண்டு முதன்மையனானவனை’ என்னுதல்; அப்போது இந்திரன் ஒழியக் கொள்க. 2மூவர் என்கிற இது, எண்ணப்படுபெயராய் மூவரிலும் வைத்துக் கொண்டு காரணபூதன்’ என்றபடி. அஞ்சி - மேற்கூறியவை எல்லாம் அச்சத்திற்குக்காரணம்; ‘என்றது, என் சொல்லியவாறோ? ‘எனின், ‘உலகத்துக்கு எல்லாவித உறவுமாய் இருக்கிறவனை நம்மாலே கிட்டப்போமோ? நித்தியசூரிகளுடைய இருப்புக்குக் காரணமாய் உள்ளவனை நம்மாலே கிட்டப்போமோ? பிரஹ்மன் உருத்திரர் இவர்களுக்கு நிர்வாஹகனாய் இருக்கிறவனை நம்மாலே கிட்டப்போமோ?’ என்று இங்ஙனம் அஞ்சி என்றபடி.

    உலகத்துள்ளீர்கள் நீர் - உலகத்தில் உள்ளவரான நீங்கள். அவன் இவன் என்று கூழேன்மின் - ‘அவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களால் அளவிடமுடியாதவனாய் அசாதாரண விக்கிரஹத்

____________________________________________________ 

1. ‘மூவர்தம் உள்ளும் ஆதியை’ என்பதற்கு மூன்று வகையான பொருள்
  அருளிச்செய்கிறார்: ஒன்று, ‘மூவர்தாம் - பிரமன் சிவன் இந்திரன், உள்ளும்
  - தியானிக்கின்ற, ஆதி - காரணன்,’ என்பது; இரண்டாவது, ‘உள்
  ஆதியை - ‘அந்தரியாமியாயிருக்கிற நிர்வாஹகன்’ என்பது. மூன்றாவது,
  ‘மூவர்தம்முள்ளும் - பிரமன் விஷ்ணு சிவன் என்னும் மூவருக்குள்ளே,
  ஆதியை முதல்வனை’ என்பது.

2. ‘’மூவர்தம்முளும்’ என்றால், ‘மூவரிலும் வைத்துக்கொண்டு’ என்று
  பொருள் கூறும் முறைதான் என்?’ என்னும் வினாவைத் திருவுள்ளத்தே
  கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘மூவர் என்கிற இது
  எண்ணப்படுபெயராய்’ என்று தொடங்கி. என்றது, படைத்தல் காத்தல்
  அழித்தல் என்னும் முத்தொழில்கட்கும் மூவரைக் காரணமாகக் கொண்டு
  பேசுகிறார் ஆகையாலே, மூவர் என்ற தொகை மும்மூர்த்திகளைக்
  குறிக்கும் என்றபடி. அவர்களுக்கும் கடவன் இவனாகையாலே,
  ‘அவர்களுக்குள்ளே காரணமாக இருப்பவன் இவன்’ என்றபடி.