| New Page 1 
தோடே நித்தியசூரிகளுக்கு 
அனுபவிக்கப்படுகின்றவனாய்க் கொண்டிருக்கிறான் ஒருவன்; இவன் ஆகிறான், தேச கால வஸ்துக்களாற்பிற்பட்டு, 
நாம் விரும்பியது ஒரு பொருளைத் தனக்குத் திருமேனியாகக் கொண்டு இவ்வழியாலே நம் புத்திக்கு 
உரிமைப்பட்டவனாய் இருப்பான் ஒருவன்; ஆன பின்பு, அவன் அளவிடப்படாதவன்; இவன் அளவிற்கு உட்பட்டவன்,’ 
என்று இங்ஙனம் சந்தேகம் பொருந்திய மனம் உடையவர் ஆகாதே கொள்ளுங்கோள். நெஞ்சினால் நினைப்பான் 
எவன் - 1மனத்தினாலே யாதொன்றைத் திருமேனியாகக் கோலினீர்கள்? நீள்கடல் வண்ணன் 
அவன் ஆகும் - அளவிட முடியாத பெருமையையுடைய சர்வேசுவரன் அதனையே தனக்கு அசாதாரண விக்கிரஹமாகக் 
கொண்டு விரும்பும். 2‘பிராஹ்மணர்கள் அக்நியில் பார்க்கிறார்கள்; யோகிகள் 
இருதயத்தில் பார்க்கிறார்கள்; அறிவில்லாதவர்கள் பிம்பங்களிலே; சமமாகப் 
பார்க்கும் ஞானிகள் எங்கும் பார்க்கிறார்கள்,’ என்று ரிஷிகளைப் போலே தம் வாயாற்சொல்ல 
மாட்டாமையாலே ‘அவன், இவன்’ என்கிறார்.
 இனி, 3‘நெஞ்சினால் 
நினைப்பான் எவன்? அவனே நீள்கடல் வண்ணன் ஆகும்’ என்று கொண்டு கூட்டி, ‘அங்குத்தைக்கு உகந்தருளின 
இடத்தை விபூதியாக நினையாதே, இங்குத்தைக்கு
 
_____________________________________________________  
1. மனக்கோள் நினக்கென 
வடிவு வேறிலையே’ என்பது 
பரிபாடல்.
 2. அர்ச்சாவதார விக்கிரகத்தைச் 
சொல்லுகிறாராகில், நெஞ்சினால் நினைப்பது
 யாதொன்று எனக் கூறாது, ‘நெஞ்சினால் நினைப்பான் 
எவன்? அவன்
 இவன்’ என்று உயர்திணையாற்கூறுவதற்குக் காரணத்தை அருளிச்
 செய்கிறார், ‘பிராஹ்மணர்கள்’ 
என்று தொடங்கி.
 
 இங்குக் கூறப்படும் 
இச்சுலோகப் பொருளோடு ‘ஊன்கணார்க்குப்
 படிமையினும், அந்தணர்க்கு வேள்வித்தீயினும், யோகிகட்கு 
உள்ளத்தினும்,
 ஞானிகட்கு எவ்விடத்தும் வெளிப்படுதலாற் சுடர் வளப்பாடு கோடலை
 ‘அந்தணர் 
காணும் வரவு’ என்று கூறினார்,’ என்ற பரிமேலழகருரை ஒப்பு
 நோக்கலாகும்.
 
(பரிபா. 2 : 61 - 68.) 
 
3. ஆண்டான் நிர்வாகத்தில் 
அர்ச்சாவதாரத்துக்குப் பிராதாந்யம். முன்னேகூறிய யோஜனையில் பரமபதநாதனுக்குப் பிராதாந்யம். 
அங்குத்தை -
 பரமபத நாதன். உகந்தருளின இடம் - அர்ச்சாவதாரம். விபூதியாக -
 ஸேஷமாக. இங்குத்தைக்கு 
- அர்ச்சாவதாரத்துக்கு. குணாதிக்யத்தாலே
 வஸ்துவுக்குப் பிராதாந்யமாகையாலே குணாதிக்யமுள்ள
 அர்ச்சாவதாரத்திற்கே 
பிரதாநம் என்பது ஆண்டான் நிர்வாஹத்துக்குக்
 கருத்து.
 |