|
யங
யங்களுக்குத் தகுந்தவராய்’
என்றும், ‘எந்தம்மை விற்கவும் பெறுவார்களே’ 1என்றும் வருகின்ற பிரமாணங்களைக்
காண்க.
மேலும், தந்தைக்கு
ஒரு தேசம் உரியதாமானால், அது புத்திரனுக்கும் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியாக இருக்கும்; அப்படி
இராத அன்று, தந்தையினுடைய செல்வத்திற்குக் கொத்தையாம். மேலும், 2‘சமுசாரமாகிற
விஷமரத்துக்கு அமிருதத்திற்குச் சமானமான இரண்டு பழங்கள் உண்டு; அவை ஒரே காலத்தில் கிருஷ்ணனிடத்தில்
பத்தியும் அவன் அடியார்களிடத்திலேயே எப்பொழுதும் கூடியிருத்தலுமாம்,’ என்னும்
பொருளையுடைய சுலோகத்தில் ‘தத்பக்தைர்வா ஸமாகம: பத்தர்களிடத்திலேயே கூடியிருத்தல்
‘என்கிற இடத்தில் ‘வா’ என்றதனை தேற்றேகாரத்திலே ஆக்கி, ‘உத்தேஸ்யந்தானே இங்கே சித்திக்குங்காண்’
என்று எம்பெருமானார் அருளிச்செய்வர். பெறத்தக்க பேற்றிக்கு முதல் எல்லை பகவானுக்கு
அடிமை என்ற அளவிலே நிற்றல்; முடிவின் எல்லை, பாகவதர்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் அடிமை அளவும்
வருகை.
3கச்சதா
- போகின்ற. இதற்கு எம்பெருமானார், பயிலுஞ்சுடரொளி’ என்ற திருவாய்மொழியிலும்
‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழியிலும் சொல்லுகின்ற அர்த்தத்தை ஸ்ரீ சத்ருக்னாழ்வான் அநுஷ்டித்துக்
காட்டினான்’ என்று அருளிச்செய்வர். 4இவ்வர்த்தத்துக்கு அடி
_________________________________________________
1.
பெரியாழ்வார் திருமொழி,
4. 4 : 10.
2. ‘உத்தேஸ்யந்தானே இங்கே
சித்திக்குங்காண்’ என்றது, பாகவத
சேஷத்துவமாகிற உத்தேஸ்யந்தானே ‘அடியார்களிடத்திலேயே’
என்ற
தேற்றேகாரத்தால் சித்திக்கும் என்றபடி.
3. அடிமை என்பது,
அவன் அடியார்கள் வரையிலும் வரவேண்டும் என்பதற்கு,
இதுகாறும் பிரமாணங்கள் காட்டி, இனி, அதற்கு
அநுஷ்டானமும்
காட்டுகிறார், ‘கச்சதா’ என்று தொடங்கி. இச்சுலோகம்,
ஸ்ரீராமா.
அயோத். 1 : 1.
4. ‘இத்திருவாய்மொழியிற்
சொல்லுகிற அர்த்தத்தைக் காலத்தால் முற்பட்ட ஸ்ரீ
சத்ருக்நாழ்வான் அநுஷ்டிக்கக் கூடுமோ?’ என்னும்
வினாவைத் திருவுள்ளம்
பற்றி, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இவ்வர்த்தத்துக்கு அடி’ என்று
தொடங்கி.
|