பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
231

New Page 1

ளோடு சம்பந்தி சம்பந்திகள் அமையாதோ?’ என்று இங்ஙனே பாகவதர்களுக்கு அடிமைப்படும் அடிமை உத்தேஸ்யமாய் அவர்களை ஆதரிக்கிறார் இத்திருவாய்மொழியில்.1

   
‘நன்று; ‘எம்மா வீட்டின்’ என்ற திருவாய்மொழியில் ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் இஃதே’ என்று பேற்றினை அறுதியிட்டார்; இங்கே, ‘பாகவதர்களுக்கு அடிமைப்படும் அடிமை உத்தேஸ்யம்,’ என்கிறார்; பேறு இரண்டாய் இருக்கிறதோ பின்னை?’ என்னில், அன்று; 2‘தனக்கேயாக எனைக் கொள்ளும் இஃதே.’ என்கிற அதன் உட்பொருளாய் இருக்கிறது இதுவும். ‘யாங்ஙனம்?’ எனின், பகவானுக்கு அடிமைப்படும் அடிமையின் எல்லையாகிறது, பாகவதர்களுக்கு அடிமைப்படும் அடிமை அளவும் வருகையே அன்றோ? நாம் அறிய வேண்டிய அர்த்தங்களில் திருமந்திரத்திற்சொல்லாதது ஒன்று இல்லையே? அதனை அறியும் திருமங்கையாழ்வாரும், 3‘நின் திரு எட்டெழுத்தும் கற்று நான்...உற்றதும் உன்னடியார்க்கு அடிமை,’ என்று இதனை அதற்கு அர்த்தமாக அருளிச்செய்தார். ‘திருமந்திரத்தில் பகவானுக்கு அடிமைப்படும் அடிமை ஒழியப் பாகவதர்களுக்கு அடிமைப்படும் அடிமை சொல்லும்படி என்?’ எனின், திருமந்திரத்திற்கு அர்த்தம், இவனுடைய 4அநந்யார்ஹ சேஷத்துவம் சொல்லுகை. அநந்யார்ஹ சேஷத்துவமாவது, ததீயர்க்குக் கிரய விக்கிரயங்கட்குத் தகுதியாம்படியாகை. ‘அந்தப் பகவானுடைய பத்தியில் ஈடுபட்ட மனத்தையுடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குக் கிரய விக்கிர
_____________________________________________________

1. ஆக, சமுசாரிகளுடைய தன்மையை அநுசந்தித்த அநுசந்தானத்தாலும்,
  கனைகழல் காணப் பெறாமையாலும் துக்கத்தையடைந்த இவர்க்கு அவ்
  விரண்டு துக்கங்களும் போகும்படி பாத ரேகை போன்று இருக்கிற ஸ்ரீ
  வைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்கக் கண்டு அவர்களை அனுபவிக்கிறார்
  என்று இத்திருவாய்மொழிக்குச் சங்கதி அருளிச்செய்தாராயிற்று.

2. திருவாய். 2. 9 : 4.

3. பெரிய திருமொழி, 8. 10 : 3.

 
'மற்றுமோர் தெய்வ முளதென்று இருப்பாரோடு
   உற்றிலேன் உற்றதும் உன்னடி யார்க்கடிமை
   மற்றெலாம் பேசிலும் நின்திரு வெட்டெழுத்தும்
   கற்றுநான், கண்ண புரத்துறை அம்மானே!’

4. அநந்யார்ஹசேஷத்துவம்-பகவான் ஒருவனுக்கே அடிமைப்பட்டிருத்தல். ததீயர்
  - அடியார்கள்.