பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
230

ஏழ

ஏழாந்திருவாய்மொழி - ‘பயிலும் சுடரொளி’

முன்னுரை

    ஈடு : 1அர்ச்சாவதாரத்தின் எளிமையை அருளிச்செய்யச் செய்தேயும், நெஞ்சில் நெகிழ்ச்சியின்றியே உலகப்பொருள்களில் ஈடுபட்டவர்களாய் இருக்கிற சமுசாரிகள் தன்மையை அநுசந்தித்தார்; ‘தேர் கடவிய பெருமான் கனைகழல் காண்பது என்று கொல் கண்கள்?’ என்ற இவர்க்கு, நிழலும் 2அடிதாறுமாய் இருக்கின்ற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் காட்டிக்கொடுக்க, 3உபதேசம் இல்லாமலே பகவத் விஷயம் என்றால் நெஞ்சு பள்ளமடையாய் இருக்கிற ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டார்; அவர்கள் பக்கலிலே திருவுள்ளம் சென்று, ‘இவர்களும் சிலரே!’ என்று அவர்களைக் கொண்டாடி, 4’நான் சர்வேசுவரனுக்கு அடிமை அன்று; ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை; அதுதன்னிலும் நேர் கொடு நேர் இவர்களுக்கு அடிமையாக வேண்டுமோ? இவர்க

_____________________________________________________

1. அர்ச்சாவதாரத்தின் எளிமையை’ என்றது முதல், ‘என்ற இவர்க்கு’ என்றது
  முடிய, மேல் திருவாய்மொழியின் அநுவாதம் ‘சமுசாரிகள் தன்மையை
  அநுசந்தித்தார்’ அதனாலும், ‘தேர் கடவிய பெருமான் கனைகழல்
  காண்பது என்றுகொல் கண்களே,’ என்கிறபடியே, கனைகழல்களைக் காண
  விரும்பினார்; அது காணப் பெறாமையாலும், துக்கத்தையடைந்த இவர்க்கு
  என்று அந்த அநுவாத வாக்கியத்தை விரித்துப் பொருள் காண்க.

2. அடிதாறு - பாத ரேகை; பாதுகையுமாம்.
  ‘அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
   நிழலும் அடிதாறும் ஆனோம்.’

  என்பது, பெரிய திருவந்தாதி (31).

3. சமுசாரிகள் திருந்தாததனாலுண்டான துக்கத்தை நீக்கியதற்குச் சூசகம்,
  ‘உபதேசமில்லாமலே’ என்று தொடங்கும் வாக்கியம்.

4. இத்திருவாய்மொழியில் வருகின்ற ‘எம்மை ஆளும் பரமரே! என்ற
  பாசுரப்பகுதியிலுள்ள ஏகாரத்தைத் திருவுள்ளம் பற்றி ‘நான்
  சர்வேசுவரனுக்கு அடிமையன்று,’ என்கிறார். ‘அடியார் அடியார்’ என்ற
  திருப்பாசுரப் பகுதியைத் திருவுள்ளம் பற்றி, ‘இவர்களோடு சம்பந்தி
  சம்பந்திகள்’ என்கிறார்.