பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
229

இன

இன்றியே அவற்றின் மிடற்றோசை பண் ஆனாற்போன்று, பகவானுடைய குணங்களை அனுபவித்த அனுபவம் வழிந்த பேச்சுகள் விழுக்காட்டாலே பண்ணானபடி. இப்பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமின் - எல்லாம் கிடைக்கிலும் கிடையாதது ஒன்று, மக்கட்குப் பகவானிடத்தில் பத்தி; இத்திருவாய்மொழியைக் கற்க அதுவும் கிடைக்கும் பரத்துவ ஞானத்துக்கு அடியான புண்ணியமாதல், சாஸ்திர ஞானமாதல், நற்குருவின் உபதேசமாதல், பகவானுடைய நிர்ஹேதுகத் திருவருளாதல் இவையனைத்தும் இல்லாதார்க்கும் அர்ச்சாவதார சௌலப்யத்தை அநுசந்திக்கவே பகவானிடத்தில் பத்தி உண்டாகக் கூடும் என்பார், ‘பத்தராகக் கூடும் பயிலுமின்’ என்கிறார். ஒரு பொருளிலும் விருப்பம் இல்லாதவனான சர்வேசுவரன் அடியார்களிடத்து வைத்த வாத்சல்யத்தாலே இவன் உகந்தது ஒன்றைத் திருமேனியாக விரும்பி, ‘இவன் உண்பித்ததை உண்டு, அகங்கள்தோறும் புக்கு விடமாட்டாமல் இருந்தால், ‘இவன் நம்மை விடமாட்டாதே இருந்த பின்பு நாமும் இவனிடத்தில் அன்பு வைத்தல் ஆகாதோ?’ என்னக் கூடும் அன்றோ?’ என்றபடி. ‘‘பயிலுமின்’ என்றால், பயில்வர்களோ?’ எனின், ‘நிதி இங்கே உண்டு’ என்ன, அவ்விடத்தைத் தோண்டுவார்களே அன்றோ? அப்படியே, ‘பத்தி உண்டாம்’ என்ன, கற்பார்கள் என்று அருளிச்செய்கிறார்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்த்
        துய்ய விபவமாய்த் தோன்றிவற்றுள் - எய்துமவர்க்கு
        இந்நிலத்தில் அர்ச்சாவ தாரம் எளிதுஎன்றான்
        பன்னுதமிழ் மாறன் பயின்று.

(26)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.