பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
258

என

என்றும், ‘இவர்கள் நல்ல மஹாத்மாக்கள்,’ என்றும் வருவன இறைவன் வார்த்தை அலவோ? 1சமுசாரத்திலே முமுக்ஷீவாய் எதிர்முகம் பண்ணின மாத்திரத்திலே சொல்லுகிறபடி இதுவானால், நித்தியசூரிகளை இப்படிச் சொல்லக் கேட்க வேண்டா அன்றே? உள்ளவர் - 2‘பரம்பொருள் இலன் என்று அறிந்தானாகில் இவனும் இல்லாதவன் ஆகிறான்,’ என்பது, ஒரு நாள் வரையிலே ‘பரம் பொருள் உளன் என்று அறிந்தானாகில் இவனும் உள்ளவன் ஆகிறான்,’ என்பதாகாதே, என்றும் ஒக்க உள்ளவர்கள் என்பார், ‘உள்ளவர்’ என்கிறார். ‘சொரூபமான அடிமை ஞானம் அழியாமையாலே உள்ளவர்கள் என்கிறார்,’ என்றபடி. 3நிரூபகம் இல்லையானால் நிரூபிக்கப்படும் பொருள் இல்லையாம் அன்றே? ஆக, ‘அடிமையாயிருக்கும் தன்மைக்கு ஒரு நாளும் குறைவு வாராதவர்கள்’ என்றபடி.

    தம் பெருமானை - அவர்கள் இருப்பிற்குக் காரணமாய் அந்த உண்மையை நடத்திக்கொடுக்குமவனை. அமரர்கட்கு - 4நம்மைக் காட்டிலும் நான்கு நாள் சாகாதே இருக்கின்றமையை இட்டு அவர்கள் பேரைச் சுமந்துகொண்டிருக்கிற இந்திரன் முதலான தேவர்களுக்கு. அருமை ஒழிய - அசுரர்கள் கையிலே படும் எளிவரவு தீரும்படியாகக் கடலைக்கடைந்து அவர்கள் பலத்தை அடையும்படி செய்தமையைத் தெரிவிக்கிறார். இனி, ‘கடலைக் கடையும் வருத்தம் தன் பக்கலிலே ஆக்கி, இவர்களுக்கு அமிருத 

_____________________________________________________

1. மேற்காட்டிய பிரமாணங்கள் எல்லாம் நித்தியசூரிகளைக் குறிப்பன
  அல்லவே? முமுக்ஷீக்களையல்லவோ குறிப்பனவாகும்?’ என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘சமுசாரத்திலே’ என்று தொடங்கி.

2. தைத்திரீய ஆனந். 6.

3. ‘அடிமை ஞானம் இல்லாவிடின் சொரூபம் போய்விடுமோ? என்னும்
  வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘நிரூபகம் இல்லையானால்’ என்று தொடங்கி.

4. ‘நித்தியசூரிகளைக் காட்டுகின்ற ‘அமரர்’ என்ற பெயர், இந்திரன் முதலான
  தேவர்களைக் காட்டுமோ?’ என்னும் வினாவிற்கு விடையாக,
  ‘நம்மைக்காட்டிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அமரர் - இறப்பு
  இல்லாதவர்கள். இந்திரன் முதலான தேவர்கட்குப் புண்ணியம் குறைந்ததும்
  இறப்பு உண்டு. ‘எல்லை மூவைந்து நாள்கள் உளவென இமைக்கும்
  கண்ணும்’ என்றார், திருத்தக்கதேவர்.