பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
268

வர

வர்களாகி அங்கிருந்து ஏத்துவார்களேயாகில், அவர்களேதாம் எம்முடைய பல வகைப்பட்ட பிறவிகள்தோறும் எமக்குத் தெய்வங்கள் ஆவர்கள்.

    வி-கு : ‘அவர்தாங்கள் கண்டீர் எம் பல் பிறப்பிடைதோறு எம் தொழுகுலம்,’ எனக் கூட்டுக. அவர்தாங்கள் என்பதில் ‘கள்’ என்பது அசைநிலை. அன்றியே, ‘தாங்கள் என்பதிலுள்ள ‘கள்’ என்பதனை ‘அவர்’ என்பதனோடும் கூட்டி ‘அவர்கள் தாங்கள்’ என்று கொண்டு பொருள் கூறலுமாம். தொழுகுலம் - தொழக்கூடிய குலதெய்வம்; குலம் - குலதெய்வத்திற்கு ஆகுபெயர். ‘யார்க்கும் தொழுகுலமாம் இராமன்’ என்றார் கம்பநாடர்.

   
ஈடு : எட்டாம் பாட்டு. 1‘அவனுடைய திருமகள்கேள்வனாந் தன்மையிலே தோற்றிருக்குமவர் எனக்கு நாதர்,’ என்கிறார்.

    நம்பனை - நம்பப்படுமவனை; 2‘எத்தகைய தீய நிலையிலும் ஆத்துமாவுக்குத் தஞ்சமானவனை’ என்றபடி. ‘மேற்பாசுரத்திலே அடியார்களை நம்பர் என்றாரே?’ எனின், ‘மேற்சொன்னவர்களும் நம்பர் ஆகைக்கு அடியானவனை என்கிறார்’ இப்பாசுரத்தில். இதனால், 3‘இவனை ஒழிந்த பந்துக்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்லர்’ என்கை; 4‘அந்தக் காகாசுரன் தகப்பனாலும் மஹரிஷிக

_____________________________________________________

1. ‘திருமார்பனை’ என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து, அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ஒவ்வொரு காலங்களில் தஞ்சமாதல் எல்லார்க்கும் உண்டு ஆதலின்,
  அவர்களினின்றும் வேறுபடுத்துகிறார், ‘எத்தகைய தீய நிலையிலும்
  ஆத்துமாவுக்குத் தஞ்சமானவனை’ என்று, இங்குக் காகாசுரன் சரிதையை
  நினைவு கூர்க.

3. பக்கம் 219 காண்க.

4. ஸ்ரீ ராமா, சுந், 38 : 33.

      இச்சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள் வருமாறு:
  ஸபித்ராச - ஈசுவரன் தனக்கும் ஆகாதவன்றும் தஞ்சமாவான்
  தானேயாயிற்று. ‘பெருமாள் பக்கல் பண்ணின அபராதத்தைக் கண்டு
  தமப்பன் கை விட்டான். சகாரத்தாலே தாயும் கைவிட்டாள்,’ என்கிறது;
  அவள் பற்று முன்னாகப் பற்றும் இவன் விடும் போது அவளும்
  விட்டாளாக வேணுமிறே. வாத்சல்யம் உறைத்த இடத்திலேயிறே முந்துற
  விழுவது; ஆகையாலே, அவன் காலிலே முந்துற விழுந்தான்; அவன்
  மையெழுதி மஞ்சள் பூசிப் புறப்பட்டு நின்றாள்; இவனும் குடநீர் வழித்து
  நின்றான், பரித்யக்த: - இவன் விருத்தஹாநி கண்டு ‘பண்டே விட்டிலோமோ?’
  என்றார்கள். ஸீரைஸ்ச - மாதா பிதாக்கள் கைவிட்டாலும் சஜாதீயர் விடாதே
  கைக்கொள்ளுவர்களாயிற்று, ‘இவர்கள் முடிய விடுகிறார்களோ?’
  என்னுமத்தாலே ‘அவர்களுக்குப்