பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
269

New Page 1

ளோடு கூடியிருக்கின்ற தேவர்களாலும் விடப்பட்டவனாய் மூன்று உலகங்களிலும் நன்றாகத் திரிந்து பின் அந்தப் பெருமாளையே புகலிடமாக அடைந்தான்,’ என்பது ஸ்ரீராமாயணம். 1‘பெற்றார் பெற்றொழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு உற்றனாய் வளர்த்து என்னுயிராகி நின்றானை’ என்றார் திருமங்கை மன்னன். ஆக, இப்படி, எல்லா நிலைகளிலும் நம்பத்தகுந்தவன் சர்வேசுவரனே என்பதனைத் தெரிவித்தபடி. ‘இதனை எங்கே கண்டோம்?’ என்னில், ஞாலம் படைத்தவனை - தனக்கு, தானும் இன்றிக்கே பிறரும் இன்றிக்கே அறிவு இல் பொருளைப் போன்று கிடக்கிற நிலையிலே பேற்றிக்கு உபயோகமான சரீரத்தை உண்டாக்கினவனை. ‘அது யாருக்குப் பிரியமாக?’ என்னில், திருமார்பனை - அவளுக்குப் பிரியமாக. 2‘பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக்கொண்டு அந்த முகத்தின் குறிப்புகளைப் பின் சென்றவனாய்ப் படைத்தல் முதலான காரியங்களைச் செய்கிறான்,’ என்னக்கடவதன்றோ?

    உம்பர் உலகினில் யார்க்கும் உண்ர்வு அறியான்தன்னை - மேல் உலகங்களில் எத்தனையேனும் அதிசயிக்கத்தக்க ஞானத்தை
_____________________________________________________

  பிரியம்’ என்று நினைத்து. ஸ மஹர்ஷிபி: - அவர்கள் விட்டாலும் விடாத
  ஆந்ருஸம்ஸ்யப் பிரதானரான ருஷிகளும் விட்டார்கள்.
  ஆந்ருஸம்ஸ்யத்துக்கு விஷய வியவஸ்தை உண்டிறே. பெற்றவர்கள்
  கைவிட்டால் நாட்டார்க்குப் பணியன்றிறே காக்கை நோக்குகை;
  ஆகையாலே, த்ரீந்லோகாந் ஸம் பரிக்ரம்ய - லோகங்களில் திறந்து கிடந்த
  வாசல் எல்லாம் ஒரு கால் நுழைந்தாற்போலே ஒன்பதின்கால்
  நுழைந்தானாயிற்று; ‘ஒரு கால் அல்லா ஒரு காலாகிலும் கிருபை
  பிறக்கக்கூடுமோ?’ என்று; இவன் புகப்புகத் தள்ளிக் கதவை அடைத்தார்கள்.
  தமேவ சரணம் கத: - தன் மேலே பிரஹ்மாஸ்திரத்தைத் தொடுத்துக்கொண்டு
  நிற்கிறவர் திருவடிகளிலே வந்து விழுந்தானாயிற்று. அதாவது,
  ‘அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள்தன் அருள் நினைந்தே
  அழுங்குழவி’ (பெருமாள் திருமொழி) என்கிறபடியே; அவன் திருவடிகளை
  ஒழியப் புகல் இல்லாமை.

1. ‘பெற்றார் பெற்றொழிந்தார்’ என்ற பாசுரப்பகுதிக்கு வியாக்கியாதா
  அருளிச்செய்த கருத்துப் பொருள் வருமாறு: மஹாவியாதியாளனானவன்,
  ‘எனக்கு இன்ன போது இன்ன வியாதி வந்து நலியும்; அப்போது நான்
  என்னை அறியேன்; பிரானே! அப்போது ரக்ஷிக்கவேணும்,’ என்று ஸ்வஸ்த
  தசையிலே அறிவித்து வைத்தால் அவர்கள் உணர்ந்திருந்து நோக்குமா
  போலே, தான் தனக்கு உதவாத தசையிலும் ஈசுவரன் ரக்ஷிக்கும்படி. இது,
  பெரிய திருமொழி, 8. 9 : 7.

2. ஸ்ரீஸ்தவம், 1.