|
என
என்ன, விருத்தவான்கள்
அன்றோ இவர்கள் என்று கைமேலே காட்டிக்கொடுக்கிறார் மேல்.
வலம் தாங்கு சக்கரத்து
மணிவண்ணன் அண்ணற்கு - 1‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’
என்றவர், ‘வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு’ என்னுமாறு போன்று, இவரும்
மேற் பாசுரத்திலே ‘திருமார்பனை’ என்றார்; இங்கே ‘வலந்தாங்கு சக்கரம்’ என்கிறார். வலப்பக்கத்தே
தரிக்கப்பட்ட திருஆழியை உடையனாய் அதற்குப் புகலிடமான நீலமணி போலே சிரமத்தைப்
போக்குகின்ற வடிவழகையுடைய அறப்பெரியவனுக்கு. ஆள் என்று உள் கலந்தார் அடியார்தம் அடியார் என்
அடிகளே - 2‘சொரூப ஞானம் முன்பாக ‘அடிமை செய்கையே பிரயோஜனம்’ என்று இருக்குமவர்களுடைய
அடியார் எனக்கு ஸ்வாமிகள்,’ என்கிறார். 3விருத்தவான் அபிமானத்திலே ஒதுங்கும்
இதுவே அன்றோ வேண்டுவது? அவர்கள் அவனிலும் உத்தேஸ்யர் ஆவர்கள் அன்றோ!
(9)
298
அடிஆர்ந்த வையம்உண்டு
ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல்குழ
விப்படி எந்தை பிரான்தனக்கு
அடியார் அடியார் தம்மடி
யார்அடி யார்தமக்கு
அடியார் அடியார் தம்மடி
யார்அடி யோங்களே.
பொ-ரை :
‘திருவடிகளுக்கு அளவான பூமியை உண்டு, உண்ட உணவுக்கு அநுகுணமாகக் காரியத்தைச் செய்த, ஒப்பு ஒன்று
இல்லாத இளமை பொருந்திய திருமேனியையுடைய எந்தை பிரானுக்கு அடியார் அடியார்தம் அடியார் அடியார்தமக்கு
அடியார் அடியார்தம்மடியார்கட்கு அடியோம் யாம்,’ என்கிறார்.
வி-கு :
படி - ஒப்பு. குழவிப்படி
- குழவி வடிவு. ‘அடியோங்களே’ என்பதில் ‘கள், ஏ’ என்பன அசைநிலைகள்.
_____________________________________________________
1.
திருப்பல்லாண்டு.
2. சொரூப ஞானம் - சேஷத்துவ
ஞானம்.
3. ‘மிகத் தாழ்ந்தவராயினும்,
பாகவதர்களுடைய அபிமானத்திற்குரியவர்கள்
உத்தேஸ்யர் எனல் கூடுமோ?’ என்னும் வினாவிற்கு விடையாக
ரசோக்தியாக அருளிச்செய்கிறார், ‘விருத்தவான்’ என்று தொடங்கி.
விருத்தவான் - சர்வேசுவரன்.
|