பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
30

தெ

தொண்டிலே சேர்ப்பித்துப் பின்பு அதற்கு விரோதியான சமுசார சம்பந்தத்தை அறுத்துக்கொடுக்கும் என்கிறார்,’ என்றபடி.

    முதற்பாட்டில், அழகருடைய திருவணிகலன்களுக்கும் திருமேனிக்குமுண்டான பொருத்தத்தின் மிகுதியைக் கூறினார்; இரண்டாம்பாட்டில், அதற்கு உலகத்தார் உவமையிட்டுச் சொல்லுமவையெல்லாம் தாழ்வினை விளைக்குமென்றார்; மூன்றாம் பாட்டில், ‘உலகத்தாரை விடும், மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நீர் சொல்லீர்,’ என்ன, ‘என்னாற்சொல்லி முடியாது,’ என்றார்; நான்காம் பாட்டில், ‘இப்படி விலக்ஷணனாய் நிரதிசய போக்யனாயிருக்கிற உன்னை உலகத்தார் இழந்துபோம்படி அவர்கட்கு மதி மயக்கத்தினைப் பண்ணினாய்,’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘உலகத்தாரில் வேறுபட்டவர் அல்லீரோ? உம்மால் பேசவொண்ணாமைக்குக் குறை என்?’ என்ன, ‘என்னை வேறுபட்டவனாக்கியது போன்று உன்னை ஓரளவிலே நிற்கின்றவனாக்கிற்றில்லையே!’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘வேதங்களும் நீரும் கூடப் பேசினாலோ?’ என்ன, ‘அவையும் உன்னைப் பரிச்சேதிக்க மாட்டா,’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘வேதங்கள் கிடக்க; வைதிக புருஷர்கள் என்று சிலருளரே, அவர்கள் ஏத்தக் குறை என்?’ என்ன, ‘அதுவும் உனக்கு நிறக்கேடு’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘கர்மபாவனையில்லாமல் பிரஹ்மபாவனையேயாயிருப்பான் ஒரு பிரஹ்மாவைக் கற்பித்து அவன் ஏத்திலும் தேவரீர்க்குத் தாழ்வு’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘மேன்மை பேசவொண்ணாது’ என்கைக்கு, ‘நீர்மையோதான் பேசலாயிருக்கிறது’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘உன்னாலே படைக்கப்பட்டவனான பிரமனாலே படைக்கப்பட்டவர்களான இவர்கள் உன்னை ஏத்துகையாவது உனக்குத் தாழ்வே அன்றோ? என்றார்; முடிவில், ‘இத்திருவாய் மொழிதானே பேற்றினைத் தரும்’ என்றார்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

முடியார் திருமலையில் மூண்டுநின்ற மாறன்
அடிவாரந் தன்னில் அழகர் - வடிவழகைப்
பற்றி முடியும் அடியும் படிகலனும்
முற்றும் அனுபவித்தான் முன்.

(21)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.