பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
31

இரண

இரண்டாந்திருவாய்மொழி - ‘முந்நீர்’

முன்னுரை

    பட்டர் திருக்கோட்டியூரிலே எழுந்தருளியிருந்த காலத்தில் 1சீராமப்பிள்ளை, ‘இவர் பரத்துவ அனுபவத்தை ஆசைப்பட்டு, அது ஒரு தேசவிசேடத்திலே சென்றால் அனுபவிக்கக் கூடியதாகையாலே அதனைப் பெறாமல் நோவுபடுகிறாரல்லர்; அவதாரங்களில் ஆசைப்பட்டுப் பிற்பாடர் ஆனோம்’ என்று நோவுபடுகிறாரல்லர்; உகந்தருளின நிலங்களிலே ஆசைப்பட்டார்; அவற்றிலும் திருமலையிலே அனுபவிக்க ஆசைப்பட்டார்; பின்னர் மேன்மேலென அனுபவிக்குமதொழிய இவர் இழந்து நோவுபடுகைக்குக் 2காரணம் என்?’ என்று கேட்க, ‘பரத்துவம் வியூகம் விபவங்களோடு அர்ச்சாவதாரத்தோடு வேற்றுமையறத் தர்ம ஐக்கியத்தாலே விஷயம் எங்கும் ஒரே தன்மையவாக நிறைந்திருக்கும். குறைந்து தோன்றுகிற இடம் நினைக்கின்ற மக்களுடைய நினைவின் தோஷத்தாலேயாயிருக்கும். கடலருகே சென்று நின்றால் தன் கண்களாலே முகக்கலாமளவே காணுதல் கூடும்; அப்படியே, அழகரு

___________________________________________________ 

1. சீராமப்பிள்ளை வினாவிய வினாவிற்குப் பட்டர் அருளிச்செய்யும் விடை,
  ‘பரத்துவம் வியூகம் விபவங்களோடு’ என்றது முதல் ‘தலைக்கட்டுகிறார்’
  என்றது முடிய. சீராமப்பிள்ளை என்பவர் பட்டருடைய திருத்தம்பியார். மேல்
  திருவாய்மொழியில் அழகருடைய அழகினை அனுபவித்தவர் மேலும் மேலும்
  அனுபவியாமல் இத்திருவாய்மொழியில் வருந்துவது என்?’ என்பது
  அப்பெரியாருடைய ஐயம்.

2. “காரணம் என்?’ என்று கேட்க’ என்பதற்கு, ‘அர்ச்சாவதாரத்தில் போக்யதை
  முதலான குணபூர்த்தி போராமையாலேயோ? காரணம் என்?’ என்று கேட்க’
  என்று பொருளை விரித்துக்கொள்க. அவ்வினாவிற்கு நேர் விடை, ‘பரத்துவம்’
  என்றது முதல் ‘நிறைந்திருக்கும்’ என்றது முடிய. ‘ஆயின், சமுசாரிகளுக்கு
  அங்ஙனம் தோன்றவில்லையே?’ என்ன, அதற்கு விடை, ‘குறைந்து
  தோன்றுகிற’ என்றது முதல் ‘தோஷத்தாலேயாயிருக்கும்’ என்றது முடிய.
  ‘ஆனால், நோவுபடுகைக்குக்காரணம் என்?’ என்ன, என்றதற்கு விடை,
  ‘கடலருகே’ என்றது முதல் ‘அனுபவிக்கக் கூடியனவாக அவை இல்லை’
  என்றது முடிய. ‘ஆயின், அனுபவிக்க முடியாவிட்டால் விட்டுப்பிடிக்க
  ஒண்ணாதோ?’ என்ன, என்றதற்கு விடை, ‘அவனை அனுபவிக்க வேணும்
  என்னும் ஆசையாலே விடமாட்டுகின்றிலர்,’ என்னுமதனை உவமை முகத்தால்
  அருளிச்செய்கிறார், ‘பெருவிடாய்ப்பட்டவன்’ என்றது முதல் ‘நோவுபடுகிறார்’
  என்றது முடிய.