பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
310

New Page 1

கைக்கு நடுவே பதின்கால் பட்டைப் பொதிசோறு அவிழ்க்க வேண்டுங்காணும். எத்தனை காலம் புலம்புவனே - 1‘சாதனமாக நினைத்துச் சொல்லமாட்டார், அடையத்தக்க பேறாக நினைத்துத் தவிரமாட்டார்; இதற்கு முடிவு என்?’ என்கிறார்.

(10)

310

        புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை
        நலம்கொள்சீர் நன்குரு கூர்ச்சட கோபன்சொல்
        வலம்கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
        இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே.

   
பொ-ரை : எல்லாரும் கொண்டாடுகின்ற குணங்களையுடைய பூமியை அளந்த பெருமானை நன்மையைக் கொண்ட ஞானச் சிறப்பினையும் நன்மையையுமுடைய திருக்குருகூரிலே அவதரித்த ஸ்ரீ சடகோபரால் அருளிச்செய்யப்பட்ட வலிமையையுடைய ஆயிரம் பாசுரங்களுள் ஒப்பற்ற இப்பத்துப் பாசுரங்களையும் சொல்லுகின்றவர்கள் யாவரும் பேரொளி மயமான பரமபதத்தை அடைவார்கள்.

    வி-கு : ‘புலம்பு சீர்’ என்பது, பெருமானுக்கு அடைமொழி. ‘நலங்கொள் சீர்ச் சடகோபன்’ என்க. அன்றி, குருகூர்க்கு அடையாக்கலுமாம். ‘இவை ஓர் பத்தும் சொன்னால், சொல்லும் யாவரும் இலங்குவான் ஏறுவர்,’ எனக் கூட்டுக. இலங்கு வான்: நிகழ்கால வினைத்தொகை. வான் - ஈண்டுப் பரமபதத்தைக் குறித்தது; இடவாகு பெயர்.

    ஈடு : நிகமத்தில், 2‘இத்திருவாய்மொழியில் சொல் மாத்திரத்தாலே இதில் பிராத்தித்தபடியே அனுபவிக்கலான பரமபதத்தை அடையப் பெறுவர்,’ என்கிறார்.

    புலம்பு சீர் - இவர் புகழுமாறு போலே உலகம் அடையப் புகழும்படி ஆயிற்று அவன் குணங்கள். பூமி அளந்த பெருமானைச் சொல் - பூமியை அளந்து, பிறருக்கு அடிமையாய் இருத்தல், தனக்குத்தானே உரியவனாய் இருத்தல் என்னும் இவற்றைத் தவிர்த்த அறப்பெரியவனை ஆயிற்றுக் கவிபாடிற்று. நலம் கொள் சீர் நன்குருகூர்ச் சடகோபன் சொல் - அனுபவிக்க வேண்டும்.

____________________________________________________

1. ‘ஏன் புலம்ப வேண்டும்? சொல்ல ஒண்ணாதோ?’ எனின், ‘சாதனமாக
  நினைத்துச் சொல்லமாட்டார்,’ என்கிறார்; ‘அங்ஙனமாயின், தவிர
  வொண்ணாதோ?’ எனின், ‘அடையத்தக்க ... ... ...  தவிரமாட்டார்’
  என்கிறார்.

2. ‘இவையும் ஓர் பத்துச் சொன்னால் யாவரும் இலங்கு வான் ஏறுவர்,’
  என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.