பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
312

ஒன

ஒன்பதாந்திருவாய்மொழி - ‘சொன்னால் விரோதம்’

முன்னுரை

    ஈடு : 1இப்படித் தம் இழவுக்குக் கூப்பிடுகிற இது தவிர்ந்து தங்கள் இழவுக்குக் கூப்பிடும்படி செய்தார்கள் சமுசாரிகள். தாமும் தம்முடைய இந்திரியங்களின் கூட்டமுமாய்க் கேட்டார் எல்லாம் நீராகும்படி கூப்பிட்டார் மேல் திருவாய்மொழியில்; 2‘பருகிக் களித்தேனே!’ என்கிறபடியே, பகவானை அனுபவித்து அதனால் களித்துப் பின்பு ஒருவர்க்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கு 3‘அடியார்கள் குழாங்களை உடன்கூடுவது என்றுகொலோ!’ என்று நித்தியசூரிகள் திரளிலே புகத்தேடியது போன்று, இவர் இழவாலே கூப்பிட்ட பின்னர் ‘இந்த இழவுக்குக் கூட்டு ஆவார்கள் அன்றோ?’ என்று சமுசாரிகளைப் பார்த்தார்; அவர்கள் பேற்றுக்குக் கூட்டு இல்லாததைப் போன்று இழவுக்கும் கூட்டு இன்றிக்கே இருந்தார்கள்; 4‘அறியார் சமணர்; அயர்த்தார் பவுத்தர்;

____________________________________________________

1. ‘மேல் திருவாய்மொழியில் அப்படி விடாய்த்தவர் அவ்விடாய் தீர்ந்து
  பரோபதேசம் செய்கிறாரோ?’ என்கிற சங்கையிலே, ‘அது தீராதிருக்கச்
  செய்தே சமுசாரிகள் இழவு சகிக்கமாட்டாமல் பரோபதேசம் செய்கிறார்,’
  என்று சங்கதி அருளிச்செய்கிறார், ‘இப்படித் தம் இழவுக்கு’ என்று
  தொடங்கி. இதனையே விவரிக்கிறார் ‘தாமும் தம்முடைய’ என்று தொடங்கி.

2. திருவாய். 2. 3 : 9.

3. திருவாய். 2. 3 : 10.

4. கூட்டின்றிக்கே இருந்தமைக்குக் காரணம் என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘அறியார் சமணர்’ என்றது முதல், ‘திரிகின்றவர்களுமாய்
  இருந்தார்கள்’ என்றது முடிய. ‘அறியார் சமணர்’ - இது, நான்முகன்
  திருவந். 6.
மேற்கோள் பாசுரத்துக்குப் பொருள் அருளிச்செய்கிறார்.
  ‘பொருத்தமில்லாதவைகளை’ என்று தொடங்கி. ‘பொருத்தமில்லாதவைகளைச்
  சொல்லுவாரும்’ என்றது, தத்துவத்தின் உண்மையை அறியாமல்
  சொல்லுகின்றவர்களை; என்றது, சமணரை. ‘ஞானசந்தானத்தைக் கொள்ளுவார்’
  என்றது, பௌத்தர்களை. ஞானசந்தானம் - ஞானபரம்பரை. ‘பிரத்யபிஜ்ஞ
  அர்ஹமாம்படி’ என்றது, ‘அனுபவித்ததை மீண்டும் நினைப்பதற்குத்
  தகுதியாம்படி’ என்றவாறு. ‘தன்னைப் போன்றான் ஒரு க்ஷேத்ரஜ்ஞனை
  ‘ஈசுவரன்’ என்று இருப்பாரும்’ என்றது, சைவர்களை. க்ஷேத்ரஜ்ஞன் -
  ஆத்துமா. இங்குக் கூறப்படுவனவற்றை முதற்பத்து அவதாரிகை ‘திருமகள்
  கேள்வன் ஒன்று’ பக். 9-13 இல் காணலாம்.