|
இவன
இவன்தனக்கு? மறந்தவற்றை
அன்றோ இது கேட்ட உலகத்தார் நினைப்பது? அவனுடைய தோஷங்களை வெளியிட்டு அவ்வழியாலே தாழ்வினை
விளைவிக்கின்றவர்களாய், பாடத் தகாதாரைக் கவி பாடுகையாலே மேல் நரகமாய், ‘இன்னானைக் கவி
பாடினவன் அன்றோ இவன்?’ என்று, ‘தீண்டாதே கடக்கப்போ’ என்னும்படியாய் இருக்கிற புல்லர்களைக்
கவி பாடித் திரிகிற படியைக் கண்டு;
‘ஆத்துமா இறைவனுக்கு
அடிமையாய் இருக்க, அவனுக்கே உரியனவான உங்களுடைய உறுப்புகளைக்கொண்டு பிறரைத் துதித்தல் ஈடு
அன்று’ என்று நலத்தை அருளிச்செய்ய, இராவணனுக்கு விபீடணன் முதலியோர் சொன்ன நலம் போலே அது
பலியாது ஒழிய, ‘நலம் சொல்லவும் செவி தாழாத இவர்களோடு ஒத்த சம்பந்தம் அன்றோ நமக்கு உள்ளது?’
என்று பார்த்து, ‘இவர்கள் நடுவே இத்தேசத்தில் இச்சரீரத்தோடே வாசிக்கிற நாம் முந்துற முன்னம்
பகவானுக்குத் தக்கனவான உறுப்புகளையுடையோமாகப் பெற்றோம் அன்றே!’ என்று, வழி பறிக்குமிடத்துத்
தம் கையிற் பொருள் கொண்டு தப்பிப் போனார் மகிழுமாறு போன்று 1தமக்கு உண்டான
வேறுபாட்டினை நினைந்து தம் இலாபத்தைப் பேசிப் பிரீதியோடே தலைக்கட்டுகிறார்.
____________________________________________________
‘ஆயிர மாமறைக்
கும்அலங் காரம், அருந்தமிழ்க்குப்
பாயிரம், நாற்கவிக்
குப்படிச் சந்தம், பனுவற்கெல்லாம்
தாய்,இரு நாற்றிசைக்
குத்தனித் தீபம்,தண் ணங்குருகூர்ச்
சேய்இரு மாமர பும்செவ்வி
யான்செய்த
செய்யுள்களே.’
என்பது
சடகோபரந்தாதி.
‘திங்களின் இளங்குழவிச்
செம்மல்இவன் என்றும்
செய்யபரி திக்குழவி
ஐயன்இவன் என்றும்
தங்களின் மகிழ்ந்திரு
குலத்தரசர் தாமும்
தனித்தனி
உவப்பதொர் தவப்பயனு மொத்தே.’
என்றார்
சயங்கொண்டார்.
(கலிங்கத்துப் பர. 238.)
1. ‘உலகம் படைத்தான்
கவி ஆயினேற்கு’ என்றதனைத் திருவுள்ளம் பற்றித்
‘தமக்கு உண்டான வேறுபாட்டினை அநுசந்தித்து’
என்கிறார்.
|