பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
324

னுதல

னுதல். 1‘ஆன பின்னர், என்னைப் போலே இருக்கை காணுங்கோள் உங்களுக்கும் அடுத்திருப்பது’ என்கிறார் என்றபடி.

(1)

312

        உளனாக வேஎண்ணித் தன்னைஒன் றாகத்தன் செல்வத்தை
        வளனா மதிக்கும்இம் மானிடத் தைக்கவி பாடிஎன்
        குளன்ஆர் கழனிசூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
        உளன்ஆய எந்தையை எந்தைபெம் மானை ஒழியவே?

   
பொ-ரை : குளங்கள் நிறைந்திருக்கின்ற கழனிகள் சூழ்ந்துள்ள இடம் அகன்ற நல்ல குறுங்குடியில் சௌலப்யம் முதலிய குணங்களைப் பிரகாசிப்பித்துக்கொண்டு நித்தியவாசம் பண்ணுகின்ற எந்தையை எந்தைக்குப் பெருமானை ஒழிய, தன்னை உள்ளவனாகவே கொண்டு ஒரு பொருளாக எண்ணித் தன் செல்வத்தை மிக உயர்ந்ததாக மதித்திருக்கும் இம்மானிடத்தைக் கவி பாடுவதால் பயன் யாது?

    வி-கு :
‘தன்னை ஒன்றாக எண்ணி மதிக்கும் இம்மானிடம்’ என்க. ‘என்’ என்பது ஈண்டு இன்மை குறித்து நின்றது. குளன் - குளம் என்பதன் போலி. ‘பெம்மானை ஒழிய, கவி பாடி என்?’ எனக் கூட்டுக.

    ஈடு :
இரண்டாம் பாட்டு. 2‘என்றும் உள்ளதுமாய் நிறைந்திருப்பதுமான செல்வத்தையுடையவனாய், சொரூப ரூப குணங்களால் நிறைந்தவனுமாய், அடையத் தக்கவனுமான சர்வேசுவரனை விட்டு, ஒரு சொல் சொல்லுகைக்கும் விஷயம் இல்லாத செல்வமுமாய், அது தானும் நிரூபித்தால் நிலை நில்லாமையாலே பொய்மையுமாம் அது தனக்குப் பற்றுக்கோடும் தேடிப் பிடிக்க வேண்டும்படியாய் இருக்கிற புல்லரைக் கவிபாடி என்ன பிரயோஜனம் உண்டு?’ என்கிறார்.

____________________________________________________

1. பரோபதேசம் செய்யும் இவ்விடத்தில் தம் சித்தாந்தத்தை
  அருளிச்செய்வதற்கு அவதாரிகையில் அருளிச்செய்த காரணத்தை இங்கும்
  அருளிச் செய்கிறார், ‘ஆனபின்னர்’ என்று தொடங்கி.

2. ‘மெய்ம்மையே உளனாய’ என்றதனை நோக்கி, ‘என்றும் உள்ளதுமாய்’
  என்று தொடங்கியும், ‘குறுங்குடி உளனாய கண்ணன்’ என்றதனை நோக்கி,
  ‘சொரூப ரூப குணங்களால்’ என்று தொடங்கியும், ‘உளனாகவே எண்ணி’
  என்றதனை நோக்கி, ‘அதுதானும் நிரூபித்தால்’ என்று தொடங்கியும்,
  ‘இம்மானிடத்தை’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘அதுதனக்குப் பற்றுக்கோடும்’
  என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார். ‘உளனாகவே எண்ணி’
  என்கையாலே, ‘தர்மி சொரூபமே பிடித்து இல்லை’ என்றபடி.