| 
ஆ
 
ஆனை’ 
என்கிறார். ஆக, 1‘வண்டுகளானவை 
மதுபானப் பிரீதியாலே தென்னா தெனா என்று ஆளத்தி வைப்பாரைப்போலே ஒலிக்கிற திருமலையிலே 
அண்மையில் இருப்பவனாய் எனக்கு யானை போலே அனுபவிக்கத் தக்க பொருளாய் உள்ளவனை’ என்றபடி. 
அவ்வண்டுகளோடே சகோத்திரிகளாய் அனுபவிக்கிறார். 
 
    என் அப்பன் - 
நாட்டார் பிறரைக் கவி பாடித் திரியாநிற்க, அவர்களுக்கும் நன்மை சொல்ல வல்லேன் ஆம்படி 
பண்ணின மஹோபகாரகன். எம்பெருமான் - தீமையே செய்யினும் விட ஒண்ணாத சம்பந்தம். உளன் 
ஆகவே - 2‘ஆஸயா யதிவா ராம: - ஸ்ரீ ராமபிரான் மீண்டும் என்னைக் கூப்பிடுவாரோ என்னும் 
ஆசையால் அங்கே இருந்தேன்,’ என்பது போன்று பிரார்த்திக்கப்படுமவன் என் வாயாலே ஒரு சொற்கேட்டுத் 
தான் உளன் ஆகாநிற்க, நான் வேறு ஒருவரைக் கவி பாடுவேனோ? அன்றிக்கே, ‘அஸந்நேவ - இல்லாதவன் 
ஆகிறான்’ என்கிறபடியே, ‘தன்னைக் கிட்டாத அன்று சமுசாரி சேதநருடைய இருப்பு இல்லாதது போன்று, 
தான் என்னைக் கிட்டாத அன்று தன் இருப்பு இல்லையாம்படி அவன் வந்து நிற்க நான் வேறு ஒருவரைக் 
கவி பாடுவேனோ?’ என்னுதல். அன்றிக்கே, ‘அவன் என்னைக் கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளுகைக்காக 
இங்கே வந்து நிற்கிற நிலை என்னாவது, நான் புறம்பே போய் ஒருவரைக் கவி பாடினால்?’ என் 
____________________________________________________ 
1. ‘வண்டு முரல் திருவேங்கடத்து 
என் ஆனை’ என்றதற்குப் பொருள் 
  அருளிச்செய்கிறார், ‘வண்டுகளானவை’ என்று தொடங்கி. 
  ‘அவ்வண்டுகளோடே 
சகோத்திரிகளாய் அனுபவிக்கிறார்’ என்றது, ரசோக்தி. 
  சகோத்திரி-ஒரு மலையில் வசிக்கும் 
பொருள். 
 
2. ‘உளனாகவே’ என்பதற்கு, 
இரண்டு வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார்: 
  ஒன்று, ‘சத்தை பெறுவானாக இருக்க’ என்பது. இரண்டாவது 
பொருள், ‘என் 
  கவி கேட்கைக்காகக் கண்களுக்கு விஷயமாக இருக்க’ என்பது. ‘சத்தை 
  பெறுவானாக 
இருக்க’ என்ற முதற்பொருளை இரண்டு விதமாக விளக்கி 
  அருளிச்செய்கிறார், ‘ஆஸயா யதி வா ராம:’ 
என்றும், ‘அஸந்நேவ பவதி’ 
  என்றும் தொடங்கி. ‘என் கவி கேட்கைக்காகக் கண்களுக்கு விஷயமாக 
  இருக்க’ என்னும் இரண்டாவது பொருளை விரிக்கிறார், ‘அவன் என்னைக் 
  கொண்டு’ என்று தொடங்கி. 
‘ஆஸயா யதி வா ராம:’ என்பது, 
ஸ்ரீராமா. 
  அயோத். 59 : 3. 
‘அஸந்நேவபவதி’ என்பது,
தைத்திரீய 
ஆனந். 6. 
 |