பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
322

தென

தென்னா தெனா என்று வண்டு முரல் - 1இதுகாணும் இவர் கவி பாடினபடி. என்றது, ‘வண்டுகள் மதுவைக் குடித்த மயக்கத்தாலே பிரீதிக்குப் போக்கு விட்டு முரன்றது இசையாய் விழுந்தாற்போலே ஆயிற்று, இவரும் பகவானை அனுபவித்தலால் உண்டாகும் உவகைக்குப் போக்கு விட்டது கவி ஆயிற்று,’ என்றபடி. பறவைகளோடு முமுக்ஷீக்களோடு அவன்தன்னோடு வாசி அறத் தென்னா தெனா’ என்னுமித்தனை. 2பகவானுடைய அண்மையில் இருப்பார் எல்லார்க்கும் இதுவே பாசுரமானால், அவன் தனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ? ‘தென்னா என்னும் என் அம்மான்’ அன்றோ அவன்?

    திருவேங்கடத்து என் ஆனை - வேதத்தைக்காட்டிலும் ஸ்ரீராமாயணத்துக்கு உண்டான ஏற்றம் போலே, ஸ்ரீ வால்மீகி பகவான் கவி பாடின விஷயத்தைக்காட்டிலும் தாம் கவிபாடின விஷயத்திற்கு உண்டான 3ஏற்றம் சொல்லுகிறார். எப்பொழுதும் துதிக்கலாம்படி இருப்பவன். 4யானை பெறக் கவி பாடுமவர்காணும் இவர்; இவர் கவி பாடிக் கட்டின யானை ஆயிற்று அவன்; கவி பாடினவர்கட்குத் தன்னை ஒழிய வேறு ஒரு யானையைக் கொடுத்து விடுமவன் அல்லன் ஆதலின், ‘என்

____________________________________________________

1. ‘கவி பாடுதலைக் கூறும் இவ்விடத்தில் வண்டுகள் ஒலித்தலை
  அருளிச்செய்கைக்கு அடி என்?’ என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்,
  ‘இதுகாணும் இவர்’ என்று தொடங்கி.

2. ‘சர்வேசுவரனும் ஆனந்தமேலீட்டால் தென்னா தெனா என்னுவானோ?’
  எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘பகவானுடைய’ என்று
  தொடங்கி, ‘இதுவே பாசுரமானால்’ என்றது, ‘அவன் ஆனந்திப்பிக்க
  ஆனந்தத்தில் மூழ்கினவர்களாய்த் தென்னா தென்னா என்னுமிதுவே
  பாசுரமானால்’ என்றபடி. ‘அவன்தனக்கு’ என்றது, ‘இயற்கையிலேயே
  ஆனந்த சொரூபமாயுள்ள இறைவனுக்கு’ என்றபடி. அதற்குப் பிரமாணம்.
  ‘தென்னா என்னும்’ என்பது. இது, திருவாய். 10. 7 : 5.

3. ஈண்டு ஏற்றமாவன, அர்ச்சாவதார பரியந்தமான சௌலப்யம் முதலான
  குணங்கள். ‘எப்பொழுதும் காட்சிக்கினியனாய் எப்பொழுதும் துதிக்கலாம்படி
  இருப்பவன்’ என்பது, ‘ஆனை’ என்றதனால் பலித்த பொருள்.

4. ‘என் ஆனை’ என்றதனுடைய கருத்தை மேலே மேலே ரசோக்தியாலே
  அருளிச்செய்கிறார், ‘யானைபெறக் கவி பாடுமவர்’ என்று தொடங்கி. கட்டின
  - சம்பாதித்த.