|
313
314
என்னாவது, எத்தனை நாளைக்குப்
போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப்
பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர்
தாதையைப் பாடினால்,
தன்னாக வேகொண்டு சன்மம்செய்
யாமையும் கொள்ளுமே.
பொ-ரை :
புலவீர்காள்! ஆவது என்? அழிந்து போகின்ற மனிதர்களைப் பாடிப் படைக்கும் பெரிய பொருள் எத்தனை
நாள்களுக்குப் போதும்? ஒளி பொருந்திய மணி முடியைத் தரித்த விண்ணவர் தாதையைப் பாடினால்
தனக்கே உரியவனாக நினைத்துப் பிறவி அறும்படியும் செய்வான்.
வி-கு :
மன்னுதல் - நிலைபெறுதல். விண்ணவர் - நித்திய சூரிகள். தாதை - தமப்பன்.
ஈடு : நான்காம்
பாட்டு. 1‘கவி பாடினார்க்குத் தன்னோடு ஒத்த வரிசையைக் கொடுக்குமவனைக் கவி
பாடுமது ஒழிய, குறைந்த ஆயுளையுடைய புல்லரைக் கவி பாடிப் பெறுவது என்?’ என்கிறார்.
என் ஆவது - ஒன்றும்
ஆவது இல்லை. ஒரு பிரயோஜனத்துக்காக அன்றோ பிறரைக் கவி பாடுகிறது நீங்கள்? அதில் நீங்கள்
நினைக்கிறது கிடைக்காது. ‘ஆனால் கிடைப்பது என்?’ என்னில், 2மேலே கூறிய தண்மையே
கிடைப்பது. உங்கள் நினைவால் சில பொருட்பேறு, என் நினைவால் 3செல்வத்தின்பொருட்டு
மிகத்தாழ்ந்த நிலையில் விழுதலேயாம். ‘ஒன்றும் இல்லை என்பது என்? கவி பாடுவாரும் பாடினவர்களுக்குக்
கொடுப்பார்களுமாய் அன்றோ போருகிறது?’ எனின், எத்தனை நாளைக்குப் போதும் - ‘இல்லை’ என்றதனைப்
போன்றதேயாய் அன்றோ அதுதான் இருப்
____________________________________________________
1. ‘தன்னாகவே கொண்டு
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்
பொருள் என்னாவது?’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘மேலே கூறிய
தண்மை’ என்றது, மேற்பாசுரத்தில் ‘இழியக்கருதி’ என்றதனை.
3. இங்கு,
‘இலனென்று தீயவை
செய்யற்க; செய்யின்
இலனாகும் மற்றும்
பெயர்த்து.’
என்ற திருக்குறளின்
பொருள் தொனித்தல் காணலாகும்.
|