பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
332

பது? நிரூபித்தால் 1கவி பாட்டு இட்டிறையாய் அன்றோ இருப்பது? என்றது, ‘கவி கேட்பித்தற்குத் துணையாய் உள்ளவர்களையும் கூட்டிக் கேட்பித்துப் பெறுமதுவும், கவி பாடின நாள்களில் பிழைப்பதற்குப் பணையம் வைத்த பொருள்களை மீட்கவும் போராதபடி அன்றோ இருப்பது?’ என்றபடி. புலவீர்காள் - உங்கள் விசேடமான அறிவிற்குப் போருமோ இது? ‘பாடின கவியின் நேர்மை இது, பேறு இது, இதற்கு இது போரும், போராது’ என்று நீங்களே அறிய வேண்டாவோ?’ என்கிறார். இனி, ‘புலவீர்காள்’ என்பதற்குச் ‘சொற்பொருள்களின் வாசி அறியுமவர்களே!’ என்னுதல்.

    மன்னா மனிசரை - சிறிது உண்டாய் அற்பமாகிலும் நீங்கள் பெறுவது, நீங்கள் செல்லுமளவும் அவர்கள் தாம் இருக்கில் அன்றே? 2‘அவரே மாண்டார்’ என்று எதிரே வருவரே! பாடிப் படைக்கும் பெரும்பொருள் - ‘இந்தத் திருமகள் கேள்வன் குறைவு அறக் கொடானோ?’ என்று பழிக்கிறார். மின் ஆர் மணி முடி விண்ணவர் தாதையைப் பாடினால் - நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனானவனைக் கவி பாடினால். 3‘பாடிக்கொண்டேயிருக்கின்றார்கள்’ என்கிறபடியே, கவி பாடி முடி சூடி இருக்கின்றவர்கள் அன்றோ? ஆதலின், ‘ஒளி மிக்க மணிகளையுடைய முடியுடை வானவர்’ என்பார், ‘மின்னார் மணிமுடி விண்ணவர்’ என்கிறார். இதனால், ‘சென்று காணும் திரள் கவி பாடி முடி பெற்றவர்கள்’ என்றதனைத் தெரிவித்தபடி. 4‘கேட்டு ஆரார் வானவர்கள்’ என்கிறபடியே, கவி பாடிச் சென்றவர்களுக்கு ஓலக்கம் கொடுத்துக் கொண்டாடிக் கேட்பிப்பாரும் அவர்கள் என்பார், ‘விண்ணவர் தாதை’ என்கிறார். ‘பாடுதலே பிரயோஜனம்

____________________________________________________

1. ‘கவிபாட்டு இட்டிறையாய் அன்றோ இருப்பது?’ என்றது, ‘கவி பாடினதற்கு
  எதிர்ப்பை இடவேண்டும்படியாய் இருப்பது’ என்றபடி. இட்டிறை -
  ‘எதிர்ப்பை இடுகை’ என்பர் அரும்பதவுரைகாரர். இட்டிறை -
  பாடியிட்டதற்காகப் பின்னும் இறுக்க வேண்டுவது. இறுத்தல் - கொடுத்தல்.

2. ‘அரசாகிமுன் ஆண்டவரே
  மாண்டார் என்று வந்தார்அந் தோ!மனை வாழ்க்கைதன்னை
  வேண்டேன் நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே!’

  என்பது, பெரிய திருமொழிப்பாசுரம், 6. 2 : 5.

3. இருக்கு வேதம்

4. திருவாய். 10. 6 : 11.