|
அவர
அவர்களுக்குத் தாழ்வினை
விளைவிக்கக்கூடியதாம் அளவன்றிக்கே, தங்களுக்கும் தூய்மை இல்லாதவற்றைத் தீண்டுதலாகிய குற்றம்
உண்டாம்,’ என்கை. வள்ளல் புகழ்ந்து - உதாரமாகப் பாடி. என்றது, ‘அவன் தனக்கும் ஒரு நன்மை
இன்றிக்கே பிறர்க்கும் உறுப்பு அன்றிக்கே இருக்கவும், அவனுக்கு நன்மை உண்டாகிறதாகவும் அதுதான்
தம் பயனுக்கு அடியாய் இருக்கிறதாகவும் நன்றாகப் புகழ்ந்து’ என்றபடி.
நும் வாய்மை இழக்கும்
புலவீர்காள் - நீங்கள் கொள்ளும் பயன் இதுவே. 1‘இரண்டும் இல்லை’ என்று
சொன்னார் அன்றோ முன்னர்? ஆகையாலே, நீங்கள் ‘வாக்மின்கள் - எளிதிற்கவி பாடுமவர்கள்’
என்ற பிரசித்தியை இழக்குமித்தனை? அன்றியே, ‘வாய்மை என்று மெய்யாய், 2நாடு
அறிய இல்லாத அர்த்தங்களைச் சொல்லுகையாலே பொய் சொன்னீர்களாமத்தனை நீங்கள்’ என்னுதல்.
புலவீர்காள் - 3‘பேறு இழவு அறியும் நீங்கள் செய்யுமதுவோ இது? உங்கள் நன்மை நான்
சொல்லவேண்டி இருப்பதே! வர்ண ஆஸ்ரமங்களுக்குச் சேருமோ நீங்கள் செய்கிறவை? எல்லாச் சொற்களுக்கும்
பொருளாய் இருப்பவன் அவன் ஆனால், அந்தச் சொற்கள் தமக்குச் சேருமோ?’ என்கிறார்.
‘நன்று; நாங்கள்
கவி பாடுகின்றவர்களைக்காட்டிலும் நீர் சொல்லுகின்ற தலைவனுக்கு நன்மை உண்டோ?’ என்னில்,
____________________________________________________
1. ‘இரண்டும்’ என்றது,
‘கொள்ளும் பயனில்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வம்’
என்றதனால் சொல்லப்பட்ட இரண்டனையும்.
என்றது, தனக்கும் பயன்
இன்மை, பிறர்க்கும் பயன் இன்மையைத் தெரிவித்தமையைத் தெரிவித்தபடி.
2. ‘கல்லாத
ஒருவனையான் கற்றாய் என்றேன்;
காடுஎறியும்
மறவனைநாடு ஆள்வாய் என்றேன்;
பொல்லாத
ஒருவனைநான் நல்லாய் என்றேன்;
போர்முகத்தை
அறியானைப் புலிஏறு என்றேன்;
மல்லாரும் புயம்என்றேன்
சூம்பல் தோளை;
வழங்காத கையனைநான்
வள்ளல் என்றேன்;
இல்லாத சொன்னேனுக்கு
இல்லை என்றான்;
யானும்என்றன்
குற்றத்தால் ஏகின் றேனே!’
என்பது
தனிப்பாடல்.
3. ‘புலவர்’ என்ற
சொல், ‘அறிவுடையவர்கள்’ என்னும் பொருளதாதலின்,
அவ்வறிவிற்குத் தக்க செயல் இல்லையே என்பதனைக்
காட்டுகிறார், ‘பேறு
இழவு’ என்று தொடங்கி.
|