பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
339

இலர

இலராய் இருந்தது. 1செல்வர் முன்பும் இலர் ஆதலின், ‘இப்போது இல்லை’ என்ன வேண்டா; ஆதலின், ‘செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்’ எனச் சொற்களை மாற்றிப் பொருள் உரைக்கப்பட்டது. ‘ஆயின், ‘இப்போது நோக்கினோம்’ எனின், முன்பு நோக்கிற்றிலரோ?’ எனின், ‘முன்பு இவர்தாம் உலக வாழ்க்கையில் கண்வைக்குமவர் அன்றே? இவர்கள் வறிதே துக்கப்படுகிறார்களோ? ஏதேனும் பயன் உண்டோ? என்று இப்போது பார்த்தோம்,’ என்கிறார்.

    ‘நன்று; மனிதர்களில் அன்றோ இல்லாதது? தேவர்கள் மனிதர்களில் வேறுபட்டவரே; இக்கவிகளைக்கொண்டு எங்களுடைய இஷ்ட தெய்வங்களைத் துதிக்கிறோம்,’ என்ன, நும் இன் கவி கொண்டு நும் நும் இஷ்டா தெய்வம் ஏத்தினால் - உங்களுடைய இனிய கவிகளைக்கொண்டு, இராஜஸராயும் தாமஸராயும் இருக்கிற உங்களுக்குப் பொருந்தும் இராஜஸராயும் தாமஸராயும் உள்ள தெய்வங்களைத் துதித்தால். அது, செம் மின் சுடர் முடி என் திருமாலுக்குச் சேரும் - தடையில்லாத (எங்கும் பரந்த) பிரகாசமான ஒளியையுடைய ஆதிராச்சியத்திற்கு அறிகுறியான திருமுடியையுடைய திருமகள் கேள்வன் பக்கலிலே சேரும்; நீங்கள் சில ஏற்றங்களைச் சொல்லி அன்றோ கவி பாடுவது? அவை அவர்களைச் சாரமாட்டா; ‘தாமரைக் கண்ணான்’ என்றால், அது உள்ள இடத்தே போம்; 2விரூபாக்ஷகன் பக்கல் போகாதே? மற்றும், ‘சர்வாதிகன், சமஸ்த கல்யாண குணாத் மகன், சர்வ ரக்ஷகன்’ என்றாற்போலே அன்றோ கவி பாடுவது? அவை சென்று சேர்வன அவை உள்ள இடத்திலே அன்றோ? ஆகையால், உங்களுக்குக் கிடைக்கும் பலன் சௌரியமே.

___________________________________________________

1. ‘’இப்போது இல்லை நோக்கினோம்’ என்று சொற்கள் கிடந்தவாறே பொருள்
  கூறினால் என்னை?’ என்னும் வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘செல்வர் முன்பும்’ என்று தொடங்கி.

  ‘மிடுக்கி லாதானை வீம னேவிறல் விசய னேவில்லுக் கிவனென்று
  கொடுக்கி லாதானைப் பாரி யேஎன்று கூறி னும்கொடுப் பாரிலை:
  பொடிக்கொள் மேனிஎம் புண்ணி யன்எந்தை புகலூர் பாடுமின் புலவிர்காள்!
  அடுக்கு மேல்அம ருலக மாள்வதற் கியாது மையுற வில்லையே.’

  என்பது சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம்.

2. விருபாக்ஷன் - சிவன். சௌரியம் - களவு.