|
புலவ
புலவீர் வம்மின்
- 1நல்லது அறியும் நீங்கள் வாருங்கோள்; காட்டுத்தீயிலே அகப்பட்டாரை மடுவைக்
காட்டி அழைப்பாரைப் போன்று ‘வாருங்கோள்’ என்கிறார். ‘எங்களை நீர் அழைக்கின்றது என்?
எங்கள் இல் வாழ்க்கை நடக்க வேண்டாவோ, பிறரைக் கவி பாடியாகிலும்?’ என்ன, மெய்யே வாழ வேண்டினாலும்
உங்கள் தரம் குலைய வாழ வேண்டுமோ? உங்கள் தரம் குலையாமல் வாழ ஒண்ணாதோ? நும் மெய் வருத்திக்
கை செய்து உய்ம்மினோ - உங்கள் சரீரத்தை வருத்தியும் கைத்தொழில் செய்தும் வாழப்
பாருங்கோள். இதற்கு, 2‘கோட்டை சுமத்தல், புற் சிரைத்தல் செய்யமாட்டீர்களோ?’
என்று எம்பார் அருளிச்செய்வர். ‘அத்தால் எங்கட்கு வேண்டுவன பெற்று வாழமுடியாதே! பிறரைக்
கவி பாடினால் எங்களுக்கு வேண்டுவன பெற்று வாழலாம்,’ என்ன, அது ஆகுமே அன்றோ, பெற்றால்?
இம் மன் உலகில்
செல்வர் இல்லை இப்போது நோக்கினோம்-ஆற்றுப்பெருக்கின் தன்மையைப் போன்று நித்தியமான
இந்த உலகத்தில் உங்கள் கவி கேட்டு இக்கவிக்குத் தரமாகத் தருகைக்கு வள்ளல்களாய் இருக்கும்
ஸ்ரீமான்கள் இல்லை; 3‘இவர்கள் நெஞ்சு கன்றக் கவி பாடுகிற இதற்குப் பயன் உண்டோ?’
என்று இப்போது ஆராய்ந்து பார்த்தோம்; ஒருவரும்
___________________________________________________
1. ‘புலவீர்’ என்றதனை
நோக்கி ‘நல்லது அறியும் நீங்கள்’ என்கிறார். புலம்
- அறிவு; ‘புலமிக் கவரைப் புலமை தெரிதல்,
புலமிக் கவர்க்கே புலனாம்,’
என்பது
பழமொழி
நானூறு.
மீளவும், இப்பாசுரத்திலே
‘வம்மின்’
என்றதற்குத் திருஷ்டாந்த மூலமாக பாவம் அருளிச்செய்கிறார்,
‘காட்டுத்தீயிலே அகப்பட்டாரை’
என்று தொடங்கி. ‘மெய்யே’ என்பது,
சிலேடை: வாய்மை, சரீரம்.
2. கோட்டை சுமத்தல்
- மெய் வருத்துவதற்கு; புற்சிரைத்தல் - கை செய்தற்கு.
சிரைத்தல் - செதுக்குதல்.
3. ‘உலக நெறியில்
கண் வையாதவர் இப்போது ஆராய்தற்கு அடி யாது?’
என்னும் வினாவிற்கு விடையாக, ‘இவர்கள் நெஞ்சு
கன்ற’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார்.
|