|
ப
பாடி இச்சரீரத்தைக்
கழித்து இதன் பின்னர் அடிமைக்கு ஈடாய் இருப்பது ஒரு சரீரத்தைப் பெற்று அவனுக்கு அடிமை செய்ய வேண்டும்
என்று ஆசைப்பட்டு இருக்கிற யான் என் வாயைக் கொண்டு 1நீர்க்குமிழி போலே
இருக்கிற புல்லரைக் கவி பாட வல்லேனோ?’ என்கிறார்.
வேயின் மலி புரை
தோளி பின்னைக்கு மணாளனை -பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் செவ்வைக்கும் வேயிலும் விஞ்சின
அழகையுடைத்தாய் ஒன்றற்கு ஒன்று ஒத்ததான தோள்களையுடைய நப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளன்
ஆனவனை. மலிதல்-மிகுதல். 2‘பிறரைக் கவி பாடுகைக்குத் தகுதியான இச்சரீர சம்பந்தத்தை
அறுக்கைக்கும் வேறுபட்ட சிறப்பினையுடைய சரீர சம்பந்தத்தைப் பெற்றுத் திருவடிகளிலே அடிமை செய்வதற்கும்
புருஷகாரமான நப்பின்னைப்பிராட்டி’ என்கை. ‘அவள் சேர்ந்திருக்கும் சேர்த்தியிலே கவி பாடி,
யான் வேறு சிலரைக் கவி பாடவோ?’ என்கை. என்றது, 3‘இனி, கைகழியப் போக வல்லரோ,
பிராட்டி கைப்புடையிலே நின்று கவி பாடுகிறவர்?’ என்றபடி. அவள் செவ்வி கொள்ள இட்டுப் பிறந்தவன்
ஆதலின், ‘பின்னைக்கு மணாளன்’ என்கிறார். ஆய - ஆயப்பட்டு இருக்கை; என்றது, தாழ்வுகட்கு
எதிர்த்தட்டாய் இருக்கை. அன்றிக்கே, ‘ஆய’ என்றது, ‘ஆன’ என்றாய், ‘சொரூபத்தோடு பொருந்தியிருக்கிற’
என்னுதல்.
பெரும்புகழ் - சரீர குணத்தோடு ஆத்தும குணத்தோடு வாசி அற ஒரோ ஒன்றே எல்லை இல்லாமல் இருக்கை. எல்லை
____________________________________________________
1. ‘நீரிற்
குமிழி இளமை; நிறைசெல்வம்
நீரிற்
சுருட்டும் நெடுந்திரைகள்; - நீரில்
எழுத்தாகும்
யாக்கை நமரங்காள்!’
என்றார் பிறரும்.
2. இங்கு நப்பின்னைப்பிராட்டியைச்
சொல்லுகைக்கு இரண்டு வகையாக,
பாவம் அருளிச்செய்கிறார், ‘பிறரை’ என்று தொடங்கி. ‘பிறரைக்
கவி
பாடுகைக்கு’ என்றது முதல், ‘புருஷகாரமான நப்பின்னைப்பிராட்டி என்கை’
என்றது முடிய, முதல்
பாவம். ‘அவள் சேர்ந்திருக்கும்’ என்றது முதல் ‘வேறு
சிலரைக் கவி பாடவோ? என்றது முடிய, இரண்டாவது
பாவம். முதல்
பாவத்துக்குக் கருத்து, ‘பிராபக பிராப்ய தசையில் புருஷகாரமாக
இருப்பவள்’ என்பது.
இரண்டாவது பாவத்துக்குக் கருத்து, ‘கவிக்கு
விஷயமாக இருப்பவள்’ என்பது.
3. ‘தோளி’ என்றதற்கு
ரசோக்தியாக அருளிச்செய்கிறார், ‘இனி கை கழிய’
என்று தொடங்கி, கைகழிய - கைவிட்டு. கைப்புடை
- கைப்பக்கம்.
|