பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
343

நத

நத்தமாய், அதனால் ஒரு குடிப்பற்றைக் கூறுகிறது என்றும், ‘இல்’ என்பது, இல்லாமையைக் கூறுகிறது என்றும், பற்றை என்பது, கைப்பட்டதை இறுகப் பிடித்து ஒருவர்க்கு ஒன்றும் ஈயாதவர்களைக் கூறுகிறது என்றும் பொருள் கூறுவாருமுளர். ஆயின், 1திருணசமன்’ என்று கூறப்படும் வழக்கு உளது ஆதலின், மேலதே பொருள். பச்சைப் பசும்பொய்கள் பேச - மெய் கலவாத பொய்களைச் சொல்ல.

    ‘ஆயிரம் பேரும் உடைய பிரானை அல்லால் மற்று, பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேச யான் கிலேன்,’ என்க.

(7)

318

        வேயின் மலிபுரை தோளிபின் னைக்கு மணாளனை
        ஆய பெரும்புகழ் எல்லைஇ லாதன பாடிப்போய்க்
        காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
        மாய மனிசரை என்சொல வல்லேன்என் வாய்கொண்டே?

   
பொ-ரை : ‘பசுமையாலும் திரட்சியாலும் செவ்வையாலும் மூங்கிலைக்காட்டிலும் மேம்பட்டுத் தனக்குத்தானே ஒத்த தோள்களை உடையவளான தப்பின்னைப் பிராட்டிக்குக் கேள்வனான இறைவனுடைய எல்லை இல்லாதனவான பொருந்திய பெரிய புகழைப் பாடிக்கொண்டே சென்று சரீரத்தைக் கழித்து அவனுடைய தாள் இணையில் புகுகின்ற காதலையுடையனான யான், அழியக்கூடிய இம்மனிதர்களை என் வாய்கொண்டு என் சொல்ல வல்லேன்?’ என்கிறார்.

    வி-கு :
வேயின் - ‘இன்’ ஐந்தாம் வேற்றுமை உறழ்பொரு. புரைதல் - ஒத்தல். ‘மணாளன்’ என்பது, ‘மணவாளன்’ என்பதன் திரிபு. ‘வாய்கொண்டு என் சொல்ல வல்லேன்?’ என மாறுக.

    ஈடு :
எட்டாம் பாட்டு. 2‘நான் பிறரைக் கவி பாடுவேன் என்னிலும், என் வாயானது அவனை ஒழியப் பாடாது,’ என்கிறார்.

    3
‘நப்பின்னைப் பிராட்டிக்கு மணவாளனுமாய் எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமானவனுமான சர்வேசுரவனைக் கவி

____________________________________________________

1. திருணசமன் - உலர்ந்த புல்லிற்குச் சமமானவன்.

2. ‘நான் கவி பாட மாட்டேன்’ என்னாமல், ‘வாய் கொண்டு என் சொல்ல
  வல்லேன்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘நான் பிறரை’ என்று
  தொடங்கி.

3. பாசுரத்திற்குப் பிண்டப்பொருள் அருளிச்செய்கிறார், ‘நப்பின்னைப்
  பிராட்டி’ என்றது முதல் ‘பாட வல்லேனோ? என்கிறார்’ என்றது முடிய.