|
New Page 1
‘சொரூபத்திற்குத் தகுதியாக
அடையத்தக்க பரம்பொருளைக் கவி பாட வம்மின்’ என்றும் சொன்ன பத்து ஆகையாலே, சொன்ன
சொன்ன ஏற்றம் எல்லாம் தகும்படி இருக்குமாயிற்று. சன்மம் இல்லை - 1நித்தியசூரிகளைப்
‘பிறரைக் கவி பாடாதே கொண்மின்’ என்று கற்பிக்க வேண்டுவது இல்லை அன்றே? பிறத்தலால் அன்றோ
பிறரைக் கவி பாட வேண்டுகிறது? பிறரைக் கவி பாடாதே கொண்மின் என்று கற்பிக்க வேண்டும்படியான
தண்ணிய பிறவிகளிலே சேரமாட்டார்கள்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
‘சொன்னாவில்
வாழ்புலவீர்! சோறுகூ றைக்காக
மன்னாத மானிடரை வாழ்த்துதலால்
- என்னாகும்?
என்னுடனே மாதவனை ஏத்தும்’
எனும்குருகூர்
மன்அருளால் மாறும்சன்
மம்.
(29)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
____________________________________________________
1. கேவலரைப் போன்று பிறவி
அறுதலைப் பலமாகச் சொல்லுவான் என்?’
எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘நித்திய சூரிகளை’
என்று
தொடங்கி. ‘பிறரைத் துதிப்பதற்கு அடியான பிறவி நீங்குதல் மிகச் சிறந்த
பலம்,’ என்றபடி.
|