பத
பத்தாந்திருவாய்மொழி
- ‘சன்மம் பலபல’
முன்னுரை
ஈடு : 1மேல்
திருவாய்மொழியிலே பிறரைக் கவி பாடுகிறவர்களைப் பகவானிடத்தில் மீட்கப் பார்த்து, அவர்கள்
மீளாது ஒழிய, ‘இவர்களைப் போலே ஆகாமல் யான் முதன்முன்னம் பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க
உறுப்புகளை உடையவனாகப் பெற்றேன்,’ என்கிறார்; ‘பிறரைத் துதி செய்யாமைக்குத் தக்க உறுப்புகளையுடையவனான
அளவேயோ? பகவானைத் துதிப்பதற்குத் தக்க உறுப்புகளை உடையவனாகவும் பெற்றேன்,’ என்கிறார் இத்திருவாய்மொழியில்.
2‘முடியானே’ என்ற திருவாய்மொழியில், தாம் அவனை அனுபவிக்கக்கோலி, அது பெறாமையாலே,
தாமும் தம்முடைய உறுப்புகளும் பெருவிடாய்ப்பட்டுக் கூப்பிட்டார்; தாம் பகவத் விஷயத்திலே கூப்பிடுகிறது
போன்று, சமுசாரிகள் மனைவி மக்கள் முதலியவர்களைப் பற்றிக் கூப்பிடுகிறபடியை நினைத்து, அவர்கள்
கேட்டினைக் கண்டவாறே தமக்கு ‘முடியானே’ என்ற திருவாய்மொழியில் பிறந்த இழவுதானே பேறாய்த்
தோன்றிற்று.
அதற்கு மேலே,
‘அடியார்களின்பொருட்டுக் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களைப் போன்று சமுசாரிகள் நடுவே அவர்களோடு
ஒத்த வடிவைக்கொண்டு அவதரித்த 3திவ்விய அவதாரங்களையும் அவதாரங்களில் செய்த
திவ்விய செயல்களையும் வடிவழகையும் ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தியையும் திவ்விய ஆயுதங்கள்
____________________________________________________
1. மேல் திருவாய்மொழிக்கும்
இத்திருவாய்மொழிக்கும் உள்ள
பொருட்டொடர்பினைச் சுருக்கமாக அருளிச்செய்கிறார், ‘மேல்
திருவாய்மொழியில்’
என்றது முதல், ‘இத்திருவாய்மொழியில்’ என்றது
முடிய.
2. இத்திருவாய்மொழியில்
இப்படி எல்லை இல்லாத பிரீதி உண்டாகைக்குக்
காரணத்தைக் காட்டா நின்றுகொண்டு அதனை விரித்து
அருளிச்செய்கிறார்,
‘முடியானே’ என்று தொடங்கி.
3. இத்திருவாய்மொழியில்
வருகின்ற ‘சன்மம் பலபல செய்து’ என்றுதனை
நோக்கித் ‘திவ்விய அவதாரங்களை’ என்றும்,
‘மாளப்படைபொருத’
என்றதனை நோக்கித் ‘திவ்விய செயல்களை’ என்றும். ‘எங்கும் அழகு
அமர்’
என்பது போன்றவைகளை நோக்கி ‘வடிவழகை’ என்றும், ‘மட்டவிழ்
தண்ணம் துழாயான்’ என்றதனை நோக்கி,
‘ஆபரணங்கள் சேர்ந்த சேர்த்தி’
என்றும், ‘சங்கொடு சக்கரம் வில்’ என்பன போன்றவைகளைத்
திருவுள்ளம்
பற்றித் ‘திவ்விய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி’ என்றும், ‘துக்கம் இல்
ஞானம்’
என்ற பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘அகடித கடநா
சாமர்த்தியத்தை’ என்றும் அருளிச்செய்கிறார்.
|