|
இ
இருப்பர்கள் சமுசாரிகள்;
அவ்வாறு அன்றி, நித்தியசூரிகள், ‘அழகிற்குக் காரணமாகத் தரித்துக்கொண்டிருக்கிறான்’ என்று
இருப்பர்கள்; இவரும் அவர்களிலே ஒருவர் ஆகையாலே, அழகிற்குக் காரணமாகவே கொண்டு,
‘ஒள்வாள்’ என்கிறார். ஒண்மை - அழகு. 1‘ஒரு கற்பகத்தரு பணைத்துக் கணுத்தோறும்
அரும்பினாற்போலே ஆயிற்று வடிவும் திவ்விய ஆயுதங்களும் சேர்ந்த சேர்த்தி இருப்பது,’ என்றபடி.
ஆக, இங்கு நின்றும் போவார்க்கு அடையத் தக்கவர்களான நித்தியசூரிகளோடே கூட வந்து அவதரிக்கிறான்
என்பதனையும், அவ்வாறு அவதரிப்பதுவும் கண்டு அனுபவித்த பின்னர், 2‘அடியார்கள்
குழாங்கனை உடன் கூடுவது என்றுகொலோ!’ என்று பிரார்த்திக்க வேண்டாதபடி அவர்களோடே கூடக் காட்சி
கொடுக்கைக்காக என்பதனையும் தெரிவித்தபடி.
புள் ஊர்ந்து -
இதுவும் ஒரு சேர்த்தி அழகு; 3பொன் மலையின் மீமிசைக் கார்முகில் போன்று அன்றோ
இருப்பது? உலகில் - இவ்வழகுதான் ஒரு தேசவிசேஷத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்குமது அன்றோ?
அங்ஙனம் இருக்கவும் அவ்வழகினை இங்கே அனுபவிக்கும்படி செய்தானாதலின், ‘உலகில்’ என்கிறார்.
வன்மையுடைய அரக்கர் அசுரரை - இவ்வழகைக் கண்டு நெஞ்சு நெகிழாதவர்களான இராக்கதர்களையும்
அசுரர்களையும். 4தமக்கு நினைதொறும் சொல்லுந்தொறும் நெஞ்சு இடிந்து உகுகின்றதாதலின்,
இவ்விஷயத்தில் தம்முடைய மென்மை போன்று எல்லார்க்கும் இருக்குமோ என்பார், ‘வன்மையுடைய
அரக்கர்’ என்
____________________________________________________
1. திவ்விய ஆயுதங்கள்
அழகிற்குக் காரணமாயிருத்தலைத் திருஷ்டாந்த
மூலமாக அருளிச்செய்கிறார், ‘ஒரு கற்பகத்தரு’ என்று
தொடங்கி.
2.
திருவாய். 2. 3 : 10.
3.
திருவாய். 9. 2
: 6. 283ஆம் பக். குறிப்புப் பார்க்க.
4. அரக்கர்களுக்கு
நெஞ்சு நெகிழ்ச்சி இல்லாமை சித்தமாயிருக்க,
‘வன்மையுடைய’ என்று விசேடிப்பதற்குத் தாத்பர்யம்
அருளிச்செய்கிறார்,
‘தமக்கு நினைதொறும்’ என்று தொடங்கி.
‘நினைதொறும்
சொல்லுந்தொறும் நெஞ்சு நெடிந்துகும்!
வினைகொள்சீர்
பாடிலும் வேம்எனது ஆருயிர்!
சுனைகொள்பூஞ்
சோலைத்தென் காட்கரை என்னப்பா!
நினைகிலேன் நான்உனக்கு
ஆட்செய்யும் நீர்மையே!’
என்பது இவருடைய
ஸ்ரீசூக்தி,
|