பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
362

கிறார். அவனைக் காணாத போது ‘ஈஸ்வரோகம் - ‘ஈசுவரன் ஆகின்றேன்’ என்று இருக்கலாம்; திவ்விய ஆயுதங்களோடே அழகிய வடிவழகைத் திருவடி திருத்தோளிலே கண்டால், ‘சரணம்’ என்னுதல், எழுத்து வாங்குதல் செய்கை அன்றியே எதிர் இடுவதே பையல்கள்!’ என்று ஆச்சரியப்படுகிறார். ‘அழகுக்கு இலக்காய் வாழமாட்டாது, அம்புக்கு இலக்காய் முடிந்து போவதே!’ என்கிறார் என்றபடி.

    மாளப் படை பொருத - அவர்கள் முடிந்து போம்படி ஆயுதத்தாலே பொருத. அன்றிக்கே, ‘போர்க்களத்தே பொருத’ என்னலுமாம். நன்மை உடையவன் - 1போர்க்களத்தில் ஆரோத மடித்தல் ‘தன்னுடைய பிள்ளைகள்’ என்று அன்பு பாராட்டுதல் செய்யாதே, ‘அடியார்களுக்குப் பகைவர்கள் என்று அழியச்செய்த நன்மையுடையவன். அன்றிக்கே, நன்மையாவது - நினைவினாலே செய்யாமல், அவதரித்துப் போரைச் செய்து முடித்த நன்மை ஆகவுமாம். 2‘மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில், தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதோ!’ என்றார் அன்றோ இவர்தாம்? ‘அடியார்கட்குப் பகைவர் என்று அழித்தாலும், அது கொலை அன்றோ?’ எனின், யாகத்தில் செய்யப்படுகின்ற உயிர்க்கொலைகளில் கை கூசினான் ஆகில், பிராயஸ்சித்தம் பண்ண வேண்டும் என்னாநின்றதே அன்றோ? நன்மை உடையவன் சீர் பரவப்பெற்ற நான் - அவனுடைய மங்களம் பொருந்திய நற்குணங்களை முறை கேடாகச் சொல்லப்பெற்ற நான். பரவுதல் - அடைவு கெடக் கூறுதல். ஓர் குறைவு இலன் - ஒரு குறையும் உடையேன் அல்லேன்.

___________________________________________________

1. ‘மாளும்படி பொருதல் நன்மையோ?’ என்னும் வினாவிற்கு விடையாகப்
  ‘போர்க்களத்திலே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

      ஆரோதமடித்தல் - பேரருளால், கொல்லும் தொழிலைச் செய்வதினின்றும்
  மனம் நெகிழ்தல்.

  ‘ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந்து யார்மாட்டும்
  தேர்ந்துசெய் வஃதே முறை.

  ‘குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
  வடுவன்று; வேந்தன் தொழில்.’

  என்னும் திருக்குறளின் பொருளை ஈண்டு நினைவு கூர்க.

2. திருவாய். 3. 1 : 9. இது, சங்கற்பத்தால் செய்தல் ஒளி ஆகாது,
  குணத்திற்குத் தாழ்வாம்,’ என்பதற்குப் பிரமாணம்.