|
வ
வி-கு :
‘கேடுஇல்
விழுப்புகழ்’ என்கிறார். ‘தாவா விழுப்புகழ்’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார்.
‘பொருள் சேர் புகழ்’ என்றார் தெய்வப்புலமைத் திருவுள்ளுவனார், ‘பயிற்ற’ என்பது, ஈண்டுத் தன்வினையின்கண்
வந்தது. ‘வல்லார்கட்கு நாயகத்தைத் தரும்,’ என முடிக்க. நாடு, நகரம், உலகு என்பன இடவாகு பெயர்கள்.
‘காணப் பண்ணிப் பெறுத்தித் தரும்,’ என்க.
ஈடு :
முடிவில், ‘இத்திருவாய்மொழியைக்
கற்றவர்களை எல்லா உலகங்களிலும் பிரசித்தமாம்படி ஸ்ரீ வைஷ்ணவ செல்வத்திலே நடத்தி, மேலே
பரமபதத்திலே சென்றால் தன் செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.
கேடு இல்
விழுப்புகழ் கேசவனை - கேடு இல்லாமல் விழுப்பத்தையுடைத்தான நித்தியமாய் இருக்கிற மங்களம்
பொருந்திய நற்குணங்களையுடைய, கேசியைக் கொன்ற கிருஷ்ணனை. குரு கூர்ச்சடகோபன் சொன்ன -
2‘முனிவரான வால்மீகி பகவானால் சொல்லப்பட்ட ஸ்ரீராகவனுடைய சரிதம்’ என்கிறபடியே,
அவதாரத்துக்கு அவ்வருகு போகமாட்டாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட. பாடல் ஓர் ஆயிரம் -
3‘பாடத்திலும் கானத்திலும் கேட்பதற்கு மதுரமாய் இருக்கிற’ என்கிறபடியே, இசையோடே
சேர்ந்த ஆயிரத்துள். இவையும் ஒரு பத்தும் - முத்துகளை முகம் அறிந்து கோத்துச் சேர்வை
பார்க்குமாறு போன்று,
‘இவையும் ஒரு பத்து’
என்கிறார்.
பயிற்ற வல்லார்கட்கு - கற்க வல்லவர்கட்கு. ‘பயிற்ற’ என்னும் பிறவினை, ஈண்டுத் தன்வினையின்
கண் வந்தது. ‘அவன் தரும்’ என்று கூட்டுக.
நாடு - பொருளின்
விசேடத்தை அறியாத சாதாரண மக்கள். நகரம் - பொருளின் விசேடம் அறிந்திருக்கும் பெரியோர்கள்.
நன்கு உடன் காண - நன்மையோடே காண. ‘இவனும் ஒருவனே!’ என்று கொண்டாட என்றபடி. நலன் இடை ஊர்தி
பண்ணி - நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையா
___________________________________________________
1. ‘இவை பத்தும்
பயிற்ற வல்லார்க்கு’ என்று தொடங்கி, ‘தரும் ஒரு நாயகம்’
என்னுமளவும் கடாக்ஷித்து, அவதாரிகை
அருளிச்செய்கிறார். ஸ்ரீ வைஷ்ணவ
செல்வமாவன, ஞான பத்தி வைராக்கியங்கள்.
2. ‘ஸ்ரீ வால்மீகி
பகவான் இராமாவதாரத்திற்கு அவ்வருகு போகமாட்டாதது
போன்று, இவரும் கிருஷ்ணாவதாரத்திற்கு அவ்வருகு
போகமாட்டார்’
என்றபடி. அவதாரத்துக்கு - கிருஷ்ணாவதாரத்துக்கு.
3.
ஸ்ரீராமா.
|