|
வ
வது, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ. வீடும்
பெறுத்தி - பரமபுருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து. மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகம் - தன்னதான
மூன்று விதமான உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான் ஒப்பு அற்ற தலைவன் ஆம்படி பண்ணிக்கொடுக்கும்.
‘ஆயின், சர்வேசுவரனைப் போன்றவனோ இவனும்?’ எனின், அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன்
‘என்னது?’ என்னும்படி செய்யும். என்றது, ‘இவனுக்கு ஐஸ்வர்யம் கொடாநிற்கச் செய்தே, இது தனக்குப்
புறம்பாம்படி இருக்கை அன்றித் தன் ஐஸ்வர்யத்திலே அடங்கியதாகும்படி செய்து கொடுப்பான்,’ என்றபடி.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
‘சன்மம் பலசெய்து தான்இவ்
வுலகுஅளிக்கும்
நன்மையுடை மால்குணத்தை
நாடோறும் - இம்மையிலே
ஏத்தும்இன்பம் பெற்றேன்!’
எனும்மா றனைஉலகீர்!
தாத்தழும்ப ஏத்தும்ஒரு
நாள்.
(30)
மூன்றாம்பத்து ஈட்டின்
தமிழாக்கம் முற்றிற்று.
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை
மலரடி வாழ்க
நம்பிள்ளை நற்றாள்
வாழ்க!
மாறன் மலரடி
வாழ்க!
|