பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
440

அவனுக

அவனுக்கு நேர்ந்த துன்பத்தை நீக்கினான் என்றும், அது காரணமாகவே சில காலம் திருவாழி திருச்சங்குகள் இல்லாமலே இருந்தான் என்றும் வரலாறு கூறுகின்றது. திவ்வியகவி பிள்ளைப் பெருமாளய்யங்காரும் தாம் பாடிய திருவேங்கடத்தந்தாதியில் இவ்வரலாற்றினையே அகப்பொருள் துறையில் அமைத்துத்

    ‘தனித்தொண்டை மானிலத் தேபுரி
        வார்க்கருள் தாளுடையாய்!
    தொனித்தொண்டை மான்நெடு வாய்பிளந்
        தாய்!துங்க வேங்கடவா!
   
முனித்தொண்டை மான்கையில் சங்காழி
        நல்கிஎன் மூரற்செவ்வாய்க்
    கனித்தொண்டை மான்கையில் சங்காழி
        கோடல் கருமம்அன்றே.’

என்று நயம்படப் பாடியிருத்தல் காணலாகும்.

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

மாறன் மலரடி வாழ்க!