பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
439

IV

IV

    கோயில் திருமலை பெருமாள் கோயில் என்றும், போகமண்டபம் புஷ்பமண்டபம் தியானமண்டபம் என்றும், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாகத் திருவேங்கடத்தை வைத்து நம் வைணவப் பெருமக்கள் வழங்கி வருகின்றதனை நாம் பார்க்கின்றோம்.

    ‘விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித்
     திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்
     வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும்
    
ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசைச்
     செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்
     என்கண்காட் டென்றென் னுள்ளங் கவற்ற
     வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்.’

என்று திவ்வியதேச யாத்திரை செய்யப் போந்த ஓர் அந்தணன் கூறுவதாக அவன் கூற்றில் வைத்து, மேலே கூறிய முறை பிறழாமல் தம் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுவதால், கோயில் திருமலை பெருமாள் கோயில் என்று வழங்கும் வழக்கு நம் தமிழ் நாட்டில் பண்டு தொட்டே வழங்கி வருகின்ற பெரு வழக்காகும் என்று தெளிதல் தகும்.

V

    ‘ஈன்றுநாள் உலந்த மென்னடை மடப்பிடி
    கன்றுபசி களைஇய பைங்கண் யானை
    மூற்றா மூங்கில் முளைதருபு ஊட்டும்
    வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை.’

(அகம். 85)

    ‘வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்
     இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு
     ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்.’

(அகம். 213)

என்ற செய்யுட்பகுதிகளால் திருவேங்கடத்தைத் தொண்டைமான் சக்கரவர்த்தி ஆண்டு வந்தமை புலனாகின்றது. அவ்வரசர் பெருமான் திருவேங்கடமுடையானிடத்தில் ஈடுபட்டுப் பரமவைஷ்ணவனாய் ஒழுகி வந்தான் என்றும், அவனுக்குப் பகைவர்களால் துன்பம் நேர்ந்த காலத்துப் பக்தவத்சலனும் அடியார்க்கு எளியனுமான அப்பெருமான் தனது திருவாழி திருச்சங்குகளை விடுத்து