பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
438

34

34, 35, 37 ஆகிய நான்கு செய்யுள்களும் இத்திருமலையின் சிறப்பினையே கூறுவனவாம்.

    ‘உபசாந்த சித்த குருகுல பவபாண் டவர்க்கு வரதன்மை
        யுருவோன் ப்ரசித்த நெடியவன் ருஷிகேசன்
    உலகீன்ற பச்சை உமைஅணன் வடவேங் கடத்தி லுறைபவன்
        உயர்ந்த சக்ர கரதலன் மருகோனே!’

என்றார் அருணகிரிநாதர்.

(திருப்புகழ். ‘இபமாந்தர் சக்ரபதி’ என்ற செய்யுள்.)

III

    தென்னாதெ னாஎன்று வண்டுமுரல் திருவேங்கடத்து
    என்னானை என்னப்பன் எம்பெருமான் உளனாகவே’

    ‘திணரார்மேகமெனக்களிறு சேரும் திருவேங் கடத்தானே!’

என்ற திருவாய் மொழியினையும், ‘லக்ஷணோபேதமாய் இருப்பது ஒரு யானை நின்றவிடத்தே ஆயிரம் யானைகள் வந்து சேருமாதலின் ‘மழகளிற்றினம் சேர் 1என்கிறார். அங்கு நிற்கிறதும் ‘சோலை மழகளிறே ‘யன்றோ? இதனால், அங்குண்டான விலங்குகளும் ஓர் இனமாய் ஆயிற்று இருப்பது என்பதனைத் தெரிவித்தபடி,’ என்ற வியாக்கியானத்தையும் படிக்கும்போது,

     ‘புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
      குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
      கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்’     

(புறம். 389)

    ‘வடவயின்
    வேங்கடம் பயந்த வெண்கோட் டியானை’        

(அகம். 27)

    ‘கறையடி மடப்பிடி கானத் தலறக்
    களிற்றுக்கன் றொழித்த உவகையர் கலிசிறந்து
    கருங்கால் மராத்துக் கொழுங்கொம்பு பிளந்து
    நெடும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டி
    நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்
    நறவுகொடை நல்லில் புதவுமுதல் பிணிக்கும்
    கல்லா இளையர் பெருமகன் புல்லி
    வியன்தலை நன்னாட்டு வேங்கடம்’

             (அகம். 83)

என்னும் பாடற்பகுதிகள் நினைவிற்கு வாராதிரா.