|
II
II
‘வீங்குநீர்
அருவி வேங்கடம்
என்னும்
ஓங்குயர் மலையத்து
உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும்
திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய
இடைநிலைத் தானத்து
மின்னுக்கொடி
உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது
போலப்
பகையணங்கு ஆழியும்
பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின்
ஏந்தி
நலங்கிளர் ஆரம்
மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற்
பொலிந்து தோன்றிய
செங்கண்
நெடியோன்
நின்ற வண்ணமும்’
என்றார்
இளங்கோவடிகள்.
(சிலப்பதி.
காடுகாண் காதை)
‘புடையது
நெடுமால்வரைக்
கப்புறம்
புகினும்’ என்றார்
ஆசிரியமாலையுடையார்.
‘வெறிகொள் அறைஅருவி வேங்கடத்துச்
செல்லின்
நெறிகொள் படிவத்தோய்
நீயும் - பொறிகட்கு
இருளீயும் ஞாலத்து
இடரெல்லாம் நீங்க
அருளீயும்
ஆழி யவன்.’
என்றார்
ஐயனாரிதனார்.
(புறப்பொருள் வெண்பா
மாலை)
‘தேனோங்கு நீழல்
திருவேங்
கடமென்றும்
வானோங்கு சோலை மலையென்றும் - தானோங்கு
தென்னரங்கம் என்றும்
திருவத்தி யூரென்றும்
சொன்னவர்க்கும் உண்டோ துயர்?’
என்றார் பாரதம் பாடிய
பெருந்தேவனார்.
(பெருந்தேவனார்
பாரதம்)
வலங்கொள் நேமி
மழைநிற வானவன்
அலங்கு தாளிணை தாங்கிய
அம்மலை
விலங்கும் வீடுறு
கின்றன மெய்ந்நெறிப்
புலங்கொள் வார்கட்
கனையது பொய்க்குமோ?’
என்றார் கவிச்சக்கரவர்த்தி
கம்பநாட்டாழ்வார்.
மற்றும்,
கம்பராமாயணம் நாட விட்ட படலத்தில், 27, 28, 29 ஆகிய மூன்று செய்யுள்களும், ஆறு செல் படலத்தில்
33,
|