|
New Page 1
‘வேங்கடம்
குமரி தீம்புனற் பௌவமென்று
இந்நான் கெல்லை
தமிழது வழக்கே.’
என்றார்
சிகண்டியாசிரியர்.
‘வடக்கும் தெற்கும் குடக்கும்
குணக்கும்
வேங்கடம் குமரி
தீம்புனற் பௌவம்என்று
இந்நான் கெல்லை
அகவயிற் கிடந்த
நூலதின் முறையே
வாலிதின் விரிப்பின்’
என்றார்
காக்கை பாடினியார்.
‘பனிபடு சோலை
வேங்கடத்
தும்பர்
மொழிபெயர் தேஎத்த
ராயினும் நல்குவர்.’
அகநானூறு,
செய். 211.
‘நெடியோன் குன்றமும்
தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நன்னாட்டு’
என்றார்
இளங்கோவடிகள்.
(சிலப்.
வேனிற்காதை)
‘வடசொற்கும் தென்சொற்கும்
வரம்பாகி
நான்மறையும்
மற்றை நூலும்
இடைசொற்ற
பொருட்கெல்லாம் எல்லையதாய்
நல்லறத்துக்கு
ஈறாய் வேறு
புடைசுற்றும் துணையின்றிப்
புகழ்பொதிந்த
மெய்யேபோற்
பூத்து நின்ற
உடைசுற்றும் தண்சாரல்
ஓங்கியவேங்
கடத்திற்சென்று
உறுதிர் மாதோ.’
என்றார் கவிச்சக்கரவர்த்தி
கம்பநாட்டாழ்வார்.
(நாடவிட்ட
படலம். 29)
அரவணைச்செல்வன் வாழும்
அந்தமிழ் நிலத்தின் எல்லைத்
திருமலை
கண்டு உணர்ந்தோர் செறிவினைத்
தொடர்அ றுக்கும்
பெருமலை கண்டு இறைஞ்சிப்
பிறங்குவெள் ளருவி தாழும்
பொருவறும் ஏம கூடப்
பொருப்பினை இனிது கண்டான்.’
என்றார் துறைமங்கலம்
சிவப்பிரகாச முனிவர்.
(சீகாளத்திப் புராணம்)
நீலத் திரைக்கட
லோரத்திலே-நின்று
நித்தம்
தவம்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடை
யேபுகழ்
மண்டிக் கிடக்கும்
தமிழ்நாடு.’
என்றார்
பாரதியார்.
|