|
அறுமுகக
அறுமுகக்கடவுள் வரைப்பு
என்னும் இயைபு பற்றி,’ என்றார், அது கருத்தாயின், அவர் தாமே ‘இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவர்’
எனக் காஞ்சிப் புராணத்துட் கூறலான், அறுமுகக் கடவுளுக்குத் தந்தையாகலானும் அகத்தியனார்க்குக்
குரவனாகலானும் அக்கண்ணுதல் வரைப்பினுள் ஒன்றைக் கூறல் வே்டும்: ‘அற்றன்று; இருவரும் அபேதமாதல்
கருதி அங்ஙனம் கூறினார்’ எனில், தெற்கின்கண்ணும் அறுமுகக்கடவுள் வரைப்பினுள் ஒன்றே கூறல் வேண்டும்:
அங்ஙனம் இன்மையாலும், எல்லை கூறல் யாவர்க்கும் ஒப்ப முடிந்ததாதல் வேண்டுமாதலின்,
‘வீங்குநீர்
அருவி வேங்கடம்
என்னும்
ஓங்குயர் மலையத்து
உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும்
திங்களும் விளங்கி
இருமருங்கு ஓங்கிய
இடைநிலைத் தானத்து
மின்னுக்கொடி
உடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது
போலப்
பகைஅணங்கு ஆழியும்
பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக்
கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம்
மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற்
பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன்
நின்ற வண்ணமும்’
என இளங்கோவடிகள் கூறினமையும்,
திருமுருகாற்றுப் படையுள் முருகோன் மலை எனப் பரங்குன்று முதலாய பிற கூறல் அன்றி வேங்கடத்தை
அவன் மலை என நக்கீரனார் கூறாமையும், புராணங்களுள் பல நெடியோன் குன்றம் எனவே கூறலும் ஆராயின்,
வேங்கடம் அறுமுகக் கடவுள் மலையாம் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடியாமை பெறப்படலானும்,
பிற்காலத்தார் சிலர் வேறு கூறின் அது பிரமாணம் ஆகாமையானும், ‘முருகன் குறிஞ்சி நிலத்தெய்வம்
ஆகலின், அமையும்,’ எனின், கயிலாயத்தையும் மேருவையும் கண்ணுதல் மலை எனவும், பொதியிலை அகத்தியன்
மலை எனவும் கூறல் அன்றி அவன் மலை எனக் கூறல் இன்மையான், அவ்வாறே வேங்கடமும் நெடியோன்மலை
ஆகல் அன்றி அறுமுகக் கடவுள் வரைப்பு எனல் கூடாமையானும் அது பொருந்தாது என்பது.’ என்பது இயற்றமிழ்ப்புலவர்
அரசஞ்சண்முகனார்
கூறிய உரை.
(பாயிர விருத்தி,
ப.
200)
|