|
New Page 1
‘திலகம் உலகுக்காய் நின்ற
திருவேங்கடத்து எம்பெருமானே!’
குன்ற மேந்திக்
குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த
பிரான்பரன்
சென்று சேர்திரு
வேங்கட
மாமலை
ஒன்று மேதொழ நம்வினை
ஓயுமே.’
‘சுமந்து மாமலர்
நீர்சுடர் தூபங்கொண்டு
அமர்ந்து வானவர்
வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு
வேங்கடம்
நங்கட்குச்
சமன்கொள் வீடு
தரும்தடங் குன்றமே.’
‘எம்பெருமான்
பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே.’
என்பன போன்ற திருவாய்மொழிகள்
திருமலையின் சிறப்பினைக் கூறுவனவாம்.
பிற தமிழ் நூல்களும்
உரைகளும் :
I
‘வடவேங்கடம்
தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறும் நல்லுலகத்து’
என்பது
தொல்காப்பியம்.
‘நீணிலம்
கடந்த
நெடுமுடி அண்ணலை
நோக்கி உலகம் தவஞ்செய்து வீடு பெற்ற மலையாதலானும், எல்லாரானும் அறியப்படுதலானும்,
வேங்கடத்தை
எல்லையாகக்
கூறினார்,’ என்பது அச்சூத்திரப்பகுதிக்கு 1நச்சினார்க்கினியர் எழுதிய
விசேடவுரை.
‘இனி, அவர்,
‘தமிழ் நாட்டிற்கு வடக்கட்பிற எல்லையும் உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார், அகத்தியனார்க்குத்
தமிழைச் செவியறிவுறுத்த செந்தமிழ்ப் பரமாசாரியனாகிய
___________________________________________________
1. ‘பயின்ற கேள்விப்
பாரத்து வாசன்
நான்மறை துணிந்த நற்பொரு
ளாகிய
தூய ஞானம் நிறைந்த சிவச்சுடர்
தானே யாகிய தன்மை
யாளன்
நவின்ற வாய்மை
நச்சினார்க் கினியன்’
என்று புகழப்பட்டவர் நச்சினார்க்கினியர்.
|