|
வ
வாசனையோடே
போக்குவிக்கும். இவர்க்கு இப்போது உண்டாய்ப் போக்குவிக்குமென்கிறது அன்று; ‘இந்நின்ற நீர்மை
இனி யாமுறாமை’ என்றபோதே ஈசுவரன் இவர்க்கு இது போவதாக நினைப்பிட்டான். ‘ஆயின்,
‘பொல்லா ஆக்கையின் புணர்வினை யறுக்கலறா’ என்கிறது என்னை?’ எனின், 1பாதிதா
நுவ்ருத்தியாலே அருளிச்செய்கிறார். ஆனாலும், இவர் கூப்பீட்டுக்கும் ஒரு பலன் வேண்டுமே? இவரோடு
சம்பந்தமுடையவர்களுடைய சரீர சம்பந்தத்தை அறுத்துக் கொடுக்கும்.
(11)
முதற்பாட்டில்,
‘நீ தந்த கரணங்களைக்கொண்டு கேட்டினை விளைத்துக்கொண்ட நான் உன்னை வந்து கிட்டுகை என்று
ஒன்று உண்டோ? என்றார்; இரண்டாம் பாட்டில், ‘இப்படிச் சூழ்த்துக் கொண்ட பாவங்களைப்
போக்கி, தேவரீரை நான் எப்போது வந்து கிட்டுவேன்?’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘இதற்கு
முன்பு உன்னைப் பெறுகைக்குத் தந்த கரண களேபரங்களைக்கொண்டு நான் சூழ்த்துக்கொண்ட பாவங்கள்
‘நான் போக்கி வர’ என்றால் அது செய்யப்போகாது; இனி, நான் அறியாததாய் நீ அறிந்திருப்பதோர்
உபாயத்தை அருளிச்செய்ய வேணும்’ என்றார்; நான்காம் பாட்டில், ‘உன்னையொழிந்த வேறுபட்ட
பொருள்களிலே என்னுடைய தாழ்ச்சியைத் தவிர்த்து, உன் திருவடிகளிலே வாழ்ச்சியேயாம்படி செய்யவேணும்,’
என்கிறார்; ஐந்தாம் பாட்டில், ‘அப்படிச் செய்யப் பார்த்திலையாகில், உன் இனிமையை எனக்கு
எதற்காக அறிவித்தாய்? என்றார்; ஆறாம் பாட்டில், ‘இல்லாத அன்று உண்டாக்கின அருமையுண்டோ,
உண்டாக்கின இதற்கு ஒரு குணத்தைக் கொடுத்தற்கு?’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘நம் படியறியாதே
நாம் அவனை வெறுக்கிறது என்?’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘தீரக் கழியச் சாதனத்தைச் செய்தேனோ,
நான் இங்ஙனம் கூப்பிடுகைக்கு?’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், 2‘திரைவிக்ரம
__________________________________________________
1. பாதிதாநுவ்ருத்தி
- பாதிக்கப்பட்டது மீண்டும் தொடர்தல். பழுதையைக்
கண்ட ஒருவன் ‘பாம்போ!’ என்று மயங்கினான்;
மயங்கினவன், பல
காரணங்களால் ‘பாம்பு அன்று; பழுதையே,’ எனத்தெளிந்தான்;
தெளிந்தவனுக்கு அது
மீண்டும் ‘அது பாம்போ!’ என்ற எண்ணம்
உதித்தலைப் போல்வது இது.
2. திரைவிக்ரம
அபதானம் - திரிவிக்கிரம அவதாரமெடுத்த காலத்தில்
நிகழ்த்திய பெரிய நிகழ்ச்சி.
|