|
க
காட்டினோமே! இனி,
1உம்முடைய இவ்வுடம்பு நம்முடைய அனுபவத்துக்கு விரோதியுமன்றுகாணும்; நீர்தாம் கரணங்களின்
குறைவினை நினைத்தலாலே நோவு படுகிறீராகில், 2முதலிலே இது இல்லாதாரும் நம்மையனுபவிக்கும்போது
படும் பாடு இது காணும்; அவர்களும் வந்து அனுபவிக்கிற இடங்காணும் இத்திருமலை; ஆன பின்னர்,
நீரும் இவ்வுடம்போடே நினைத்த அடிமைகளெல்லாம் செய்யும்,’ என்று தான் திருமலையிலே வந்து நிற்கிற
நிலையைக்காட்டிச் சமாதானம் பண்ண, 3சமாதானத்தையடைந்தவராய், அடிமை செய்யப்
பாரிக்கிறார்.
‘யாங்ஙனம்?’ எனில்,
4தர்மி ஒன்றே ஆகையாலே, விஷயம் எங்கும் ஒக்கப் பூர்ணமான பின்பு, ஒரு தேச விசேடத்திலே
சென்றால் செய்யக்கூடிய அடிமைகளெல்லாம் இந்நிலத்திலே செய்யலாம்படிக்குத் தகுதியாகக் குறையற்றிருந்ததாகில்,
நமக்கும் இவ்வுடம்பு விரோதியாதலின்றி அடிமை செய்கைக்குப் பாங்காயிருந்ததேயாகில், இனித்தான்
அங்குப் போனாலும் 5‘அவன் கல்யாண குணங்களனைத்தையும் முற்றறிவினனான இறைவனோடு
அனுபவிக்கிறான்,’ என்கிறபடியே, குண அனுபவமன்றோ பண்ணுகிறது? அந்தச் 6சௌலப்யம்
முதலிய நற்குணங்
_____________________________________________________
1. ‘உம்முடைய இவ்வுடம்பு
நம்முடைய அனுபவத்துக்கு விரோதியுமன்றுகாணும்’
என்றது, ‘முடியானே! மூவுலகும் தொழுதேத்தும் சீர்,
அடியானே,’ என்ற
எட்டாந் திருவாய்மொழியைத் திருவுள்ளத்தே கொண்டு.
2. இத்திருவாய்மொழியில்
‘எந்தை தந்தை தந்தை’ என்ற இரண்டாம்
பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘முதலிலே இது இல்லாதாரும்’
என்று
தொடங்கி அருளிச்செய்கிறார். இது இல்லாதார் - நித்தியசூரிகள்.
3. மேல் திருவாய்மொழியில்,
‘நிலைபெற்று என் நெஞ்சம் பெற்றது நீடு உயிர்’
என்ற பாசுரப்பகுதியைத் திருவுள்ளம் பற்றிச்
‘சமாதானத்தை அடைந்தவராய்’
என்கிறார்..
4. ‘கைங்கரியத்திற்கு
விஷயனான இறைவன் பூர்ணனான பரமபதநாதன்
ஆகவேண்டாவோ?’ என்னும் வினாவைத் திருவுள்ளம் பற்றி,
அதற்கு
விடையாகத் ‘தர்மி ஒன்றேயாகையாலே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
இவ்விடத்தில்,
பட்டர் தம் திருத்தம்பியார்க்கு அருளியதை நினைவு கூர்க.
பக். 31.
5. ஆனந்தவல்லி,
1 : 2.
6. ‘அந்தம் இல்
புகழ்க் கார் எழில் அண்ணலே’ என்ற பகுதியைத் திருவுள்ளம்
பற்றிச் ‘சௌலப்யம் முதலிய’ என்று
தொடங்கி அருளிச்செய்கிறார்.
|