ஸ்ரீ
நான்காம் பத்து
முதல் திருவாய்மொழி
- ‘ஒரு நாயகம்’
முன்னுரை
ஈடு : முதற்பத்தால்,
1பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்; இரண்டாம் பத்தால், அந்தக்
கைங்கர்யத்தில் களை அறுத்தார்; மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது
2பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்; இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு
விரோதிகள் ஐஸ்வர்ய 3கைவல்யங்கள் என்கிறார் இந்த நான்காம் பத்தால்.
முதல் மூன்று பத்துகளாலும்
4துவயத்தில் பின் வாக்கியத்தின்
_____________________________________________________
1. பகவத் கைங்கர்யம்
- பகவானுக்குச் செய்யும் தொண்டு. புருஷார்த்தம் -
புருஷனாலே பிரார்த்தித்துப் பெறத்தக்கது; பேறு.
2. பாகவத சேஷத்வ
பர்யந்தமான - அடியார்கட்கு அடிமையாய் இருத்தலை
எல்லையாக உடையதான.
3. கைவல்யம் -
ஆத்தும அனுபவம்.
4. துவயம் - ஒரு
மந்திரம்.
‘ஸ்ரீமந் நாராயண சரணௌ
சரணம் பிரபத்யே!
ஸ்ரீமதே நாராயணாய நம:’
என்று இரண்டு வாக்கியமாய்
அமைந்திருத்தலின், இது துவயம் எனப்
பெயர் பெற்றது. இதில் பின் வாக்கியம், ‘ஸ்ரீமதே நாராயணாய
நம:’
என்பது.‘பெரிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற எல்லார்க்கும்
இறைவனான நாராயணனுக்கு
அடிமை செய்வேனாக வேண்டும்; அவ்
வாறு செய்யும் அடிமையும் அவனுக்கேயாக வேண்டும்’ என்பது இதன்
பொருள். இப்பொருளையே, மேல் மூன்று பத்துகளாலும் அருளிச்செய்தார்
என்பதனைத் தெரிவிக்கின்றார்.
|