பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
2

New Page 1

பொருளை அருளிச்செய்தார்; இனி, 1மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே அதில் முன் வாக்கியத்தின் பொருளை அருளிச்செய்கிறார். முதல் மூன்று பத்துகளாலும் சொன்ன புருஷார்த்தத்துக்கு உரிய உபாயத்தை 2அடியிலே அறுதியிடுகிறார். 3இவ்வடி அறியாதாரே அன்றோ வேறு உபாயங்களாகிற விலக்கடிகளில் செல்லுகின்றவர்கள்? 4நிரவதிகப் பிரீதியோடேயன்றோ, மேல், திருவாய்மொழியை இவர் அருளிச்செய்தது? தாமும் குறைவற்று, பற்றினார் குறைகளையும் தீர்க்க வல்லவராம்படி இருந்தார் மேல். சமுசாரிகளைப் பார்த்து, ‘நீங்கள் பற்றின

_____________________________________________________

1. ‘மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே’ என்றது, 4-ஆம் பத்து, 5-ஆம்
  பத்து, 6-ஆம் பத்துகளைக் குறித்தபடி. இம்மூன்று பத்துகளாலே ‘ஸ்ரீமந்
  நாராயண சரணௌ சரணம் பிரபத்யே’ என்ற முன் வாக்கியத்தின்
  பொருளை அருளிச்செய்கிறார் என்றபடி. பெரிய பிராட்டியார்
  புருஷகாரமாக, வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் ஞானம்
  சத்திகளாகிய குணங்களையுடைய எம்பெருமானுடைய திருவடிகளை
  உபாயமாகப் பற்றுகிறேன்,’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
  இப்பொருள்தன்னையே 4,5,6-ஆம் பத்துகளில் அருளிச்செய்கிறார்
  என்பதனைத் தெரிவிக்கின்றார். (முதல் பத்து அவதாரிகை    - ‘திருமகள்
  கேள்வன் இரண்டு’ காண்க.) “இதில் (துவயத்தில்) முற்கூற்றால், பெரிய
  பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது;
  பிற்கூற்றால், அச்சேர்த்தியிலே அடிமை இரக்கிறது,” என்பது
  ஸ்ரீபிள்ளைலோகாசார்யர் ஸ்ரீசூக்தி.

2. ‘அடியிலே’ என்றது, சிலேடை : முதல் திருவாய்மொழியிலே என்பதும்,
  திருவடிகளிலே என்பதும் பொருள். திருவடிகளிலே என்று பொருள்
  கொள்ளும்போது ‘உபாயத்தை’ என்பதற்கு உபாயத்தின் தன்மையை என்று
  பொருள் கொள்க. ‘சந்தித்துய்ம்மினோ’ என்பது போன்ற இடங்களில்
 
உபாயத்வம் கூறப்பட்டிருத்தல் தெளிவு. உபாயத்வம் - உபாயத்தினது
  தன்மை. உபாயம் - வழி. 

3. ‘அல்லாதார் கர்மம் ஞானம் பத்திகளை உபாயமாகக் கொள்ளாநிற்க, இவர்
  திருவடிகளை உபாயம் என்கிறது என்?’ என்னும் வினாவிற்கு விடையாக,
  ‘இவ்வடி அறியாதாரேயன்றோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அடி -
  திருவடிகள்.

4. மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
  அருளிச்செய்கிறார். ‘நிரவதிகப் பிரீதியோடே’ என்று தொடங்கி, நிரவதிகம்
  - தனக்குமேல் ஒன்று இல்லாதது.