வ
விஷயங்கள் 1தண்ணியவான
பின்பு அவற்றைவிட்டுத் திருமகள் கேள்வனைப் பற்றுங்கோள்’ என்று பரோபதேசத்தில் இழிகிறார்
இத்திருவாய்மொழியில்.
‘நன்று; ‘வீடுமின்
முற்றவும்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்; ‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியிலும்
பரோபதேசம் செய்தார்; இந்தத் திருவாய்மொழியும் பரோபதேசமாய் இருக்கின்றது; இவற்றிற்குக்
கருத்து ஏன்?’ எனின், இவை எல்லாவற்றிலும் எல்லா அர்த்தங்களும் உளவேயாகிலும் ஒவ்வொன்று ஒவ்வோர்
அர்த்தத்தில் நோக்காய் இருக்கும். ‘யாங்ஙனம்?’ எனில், ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியில்
‘இதர விஷய வைராக்கியம் முன்னாகப் பகவத் பத்தியைச் செய்யுங்கோள்’ என்றார்;
‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியில் ‘பகவானைத் துதிப்பதற்குத் தக்கனவான உறுப்புகளைக்கொண்டு
பிறரைத் துதி செய்யாமல் சர்வேசுவரனைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்றார்; இத்திருவாய்மொழியில்
‘இவர்கள் தாம் பிறரைத் துதி செய்வது சில பிரயோஜனத்திற்காகவே அன்றோ?’ என்று அவற்றினுடைய
சிறுமை, நிலையின்மை முதலிய தோஷங்களின் மிகுதியை அருளிச்செய்கிறார்.
செல்வம் அற்பமானது,
நிலையாதது முதலிய குற்றங்களையுடையதாகையாலே தண்ணிது; ஆத்துமலாபமாகிய கைவல்யம் நிலைத்து நிற்பதாயினும்,
புருஷார்த்தம் அல்லாதது ஆகையாலே, தண்ணிது; இப்படி ஐஸ்வரிய கைவல்யங்களுக்கு உண்டான தண்மையைச்
சொல்லி, ‘சர்வேசுவரன் ஆகிறான் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உடையவனாய்
விரும்பினவை அனைத்தையும் கொடுக்கக் கூடியவனாய் இருப்பான் ஒருவன்; ஆனபின்பு அவற்றை விட்டுப்
பகவானைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்று இங்ஙனே பகவானைப் பற்றுவதற்கு உண்டான நன்மையை
விளக்கிப் பேசாநின்றுகொண்டு பரோபதேசம் செய்ய இழிகிறார்.
2இவர்
தாம், மக்கள் இந்திரியங்களை வென்றவர்களாய் வந்து நின்றுகொண்டு, ‘எங்களுக்கு நலத்தை
உபதேசிக்க
_____________________________________________________
1.
தண்ணிய - இழிந்தன; தாழ்ந்தவை என்றபடி.
2. பரோபதேசம் செய்யும்போது
‘உய்ம்மின்’ என்று பன்மையிலே
அருளிச்செய்வதற்குக் காரணத்தை அருளிச்செய்கிறார். ‘இவர் தாம்’
என்று
தொடங்கி, ‘பேரருளாலே உபதேசிக்கின்றார்’ என்பது கருத்து.
|