பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
109

New Page 1


போலே
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே பல காலம் இருந்து. மண்ணூடே
விண்ணும் ஆள்வர் - 1இங்கே இருக்கச்செய்தே பரமபதம் தங்கள் சிறு முறிப்படி செல்லும்படி ஆள்வர்கள். என்றது, ‘அங்கே போனால் 2‘ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர்’ என்கை அன்றிக்கே, இங்கே இருக்கச் செய்தே தாங்கள் இட்ட வழக்காகப் பெறுவர்’ என்றபடி.

    ‘வையம் மன்னி வீற்றிருந்து’ என்கிற இடத்தில் 3‘நம்மைப் போலே வாய்புகு சோறாகப் பறிகொடாதே, பல காலம் பூமியிலே ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே 4‘நாட்டாரோடு இயல்வொழிந்து’ என்கிறபடியே, தங்கள் வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவர்கள்,’ என்று சீயர் உருத்தோறும் அருளிச்செய்வர். இளமையிலே பட்டரைப் பறிகொடுத்தவர் அன்றோ அவர்?           

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

கோவா ஈசன் குறைஎல்லாம் தீரவே
ஓவாத காலத்து உவாதிதனை - மேவிக்
கழித்துஅடையக் காட்டிக் கலந்தகுண மாறன்
வழுத்துதலால் வாழ்ந்ததுஇந்த மண்.                   

(33)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

_____________________________________________________

1. ‘விண்ணும் ஆள்வர் மண்ணூடே’ என்பதற்கு உதாரணம் வேண்டுமாகில்,
  நம்பிள்ளை முதலிய நம் முதலிகளுடைய திவ்ய சரிதைகளிற் காண்க.

2. திருவாய்மொழி, 10. 9 : 6.

3. ‘வையம் மன்னி வீற்றிருந்து’ என்பதற்கு ஓர் ஐதிஹ்யம் காட்டுகிறார்,
  ‘நம்மைப்போலே’ என்று தொடங்கி. இந்த ஐதிஹ்யத்தால் நஞ்சீயருடைய
  ஆசார்ய பிரதிபத்தி விளங்கும்.

  ‘தன்னா ரியனுக்குத் தானடிமை செய்வதுதான்
  இந்நாடு தன்னில் இருக்கும்நாள் - அந்நேர்
  அறிந்துமதில் ஆசையின்றி ஆசா ரியனைப்
  பிரிந்திருப்பார் ஆர்மனமே! பேசு.’

  என்பது உபதேசரத்தினமாலை, 64.

4. திருவாய்மொழி, 10. 6 : 2.