ந
நான்காந்திருவாய்மொழி
- ‘மண்ணையிருந்து’
முன்னுரை
1மேல்
திருவாய்மொழியில் அவனுடைய காதல் குணத்தை அருளிச்செய்தார்; இத்திருவாய்மொழியில் பிச்சு
ஏறினார்; 2இவர்க்கு மேல் திருவாய்மொழியில் பிறந்த கரைகடந்த பிரீதியானது
இவருடைய சொரூபமும் அழியும் என்னும்படியாய் இருந்தது; அந்த ரசத்தை அரையாறுபடுத்திப் பொறுக்கும்படி
செய்கைக்காக அந்தக் கலவியைச் சிறிது நெகிழ நின்றான் ஈசுவரன். 3ஆனாலும்,
பிரிந்தது அவனை ஆகையாலே, அது தன் காரியத்தைச் செய்து அன்றி நில்லாதே அன்றோ? ஆகையாலே
4ஆற்றாமை மீதூர்ந்து, செல்வத்திலே
பேராசையுள்ள ஒருவன் கிழிச்சீரையைக் கெடுத்தால் அதனோடு போலியான முடிகளை எல்லாம் அவிழ்த்து
அவிழ்த்துப் பார்க்குமாறு போன்று, அவனோடு
ஒத்த பொருள்களையும் அவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களோடு ஒத்த பொருள்களையும் அகப்பட அவனாகக்கொண்டும்,
சம்பந்தப்பட்ட பொருள்களாகக் கொண்டும் மயங்கிக் கிட்டிப் பார்த்து
_____________________________________________________
1. ‘மேல் திருவாய்மொழியில்’
என்று தொடங்கும் வாக்கியம்,
இத்திருவாய்மொழியின் கருத்து.
2. ‘மேல் திருவாய்மொழியில்
எல்லையில்லாத பிரீதியோடு செல்ல,
இத்திருவாய்மொழியில் பிச்சு ஏறியதற்கு அடி யாது?’ என்ன,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘இவர்க்கு’ என்று தொடங்கி. அரையாறுபடுத்தல் -
குறையச்செய்தல்.
3. ‘பொறுக்கும்படி செய்கைக்காக
நெகிழ நின்றான் ஈசுவரன் என்னுமிடம் இவர்
அறிந்திருந்தும் துக்கப்படுவான் என்?’ என்னும்
வினாவிற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘ஆனாலும்’ என்று தொடங்கி. ‘ஆனாலும்’ என்றது,
பொறுக்கும்படி
செய்கைக்காக வந்த பிரிவேயாகிலும்’ என்றபடி.
4.
‘ஆற்றாமை மீதூர்ந்து’ என்னுமிதனை, பின்னே வருகின்ற ‘நோவுபட்டுச்
செல்லுகிறது’ என்றதனோடு கூட்டி
முடிக்க. கிழிச்சீரை - பணப்பை.
‘அவனோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கரும்பெருமேகங்கள்’,
‘உருவுடைவண்ணங்கள்’, ‘விரும்பிப் பகவரைக் காணில்’ என்பன போன்று
வரும் பாசுரங்களைத் திருவுள்ளம்
பற்றி. ‘அவனோடு சம்பந்தப்பட்ட
பொருள்களோடு ஒத்த பொருள்கள்’ என்றது, ‘கோமள ஆன்கன்று,’
‘ஆய்ச்சியர் வெண்ணெய்கள்’, ‘வாய்த்த குழலோசை’ என்பன போன்று
வருகின்ற பாசுரங்களைத் திருவுள்ளம்
பற்றி. அவனோடு சம்பந்தப்பட்ட
பொருள்களோடு ஒத்த பொருள்களைத் தேடுகிறதற்குக் கருத்து,
‘இவர்
பகவானையும் பாகவதர்களையும் உத்தேஸ்யராக
நினைத்திருக்குமவராகையாலே, பகவானைப்
பிரியுமிடத்துப் பாகவதர்களோடு
கூடியாகிலும் தரிக்கலாம் என்று தேடுகிறார்’ என்பது.
|