பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
111

அவன

அவன் அன்றிக்கே ஒழிந்தால் மீளவும் மாட்டாதே நோவுபட்டுச் செல்லுகிறது. 1‘வைப்பாம் மருந்தாம்’ என்னும்படியே, இவர்க்குச் சேமநிதி அன்றோ அவன்?

    2‘பிராட்டியைத் தேடுவதில் நோக்கமுடைய பெருமாள் ஓரிடத்தில் சுற்றும் முகத்தைத் திருப்பி மேலே பார்க்கிறார்; ‘ஓரிடத்தில் தம் வலிமையால் நாலு பக்கங்களிலும் சுழலுகிறார்; ஓரிடத்தில் பித்தனைப்போலத் தோற்றுகிறார்,’ என்கிறபடியே, பிராட்டியைப் பிரிந்த பின்னர் ஆற்றாமையாலே மேல் நோக்கிப் பார்த்து விலங்கச் சஞ்சரிப்பது, அதுதானும் மாட்டாது ஒழிவது, ‘ஒரு மரத்தினின்றும் வேறு மரத்திலே சென்று கிட்டுவது, ‘மைதிலியைக் கண்டீர்களோ?’ என்று கேட்பது, ஆணாறு பெண்ணாறுகள் ஒன்று இன்றிக்கே தேடுவதாய், அவர் பட்டாற்போலே இவளும் அப்படியே படுகிறாள் இப்போது. இப்படி நோவுபடுகிற இவள் நிலையை நினைத்த திருத்தாயார், இவள் படுகிற பாடுகளையும் இவள் சொல்லுகிற வார்த்தைகளையும் சொல்லி, இது கண்டு தான் பொறுக்கமாட்டாமல் நோவுபடுகின்றபடியையும் சொல்லிக் 3கைவாங்குமளவாக, அவன் வந்து முகங்காட்டித் தேற்றுவிக்கத் தரித்ததாய்த் தலைக்கட்டுகிறது இத்திருவாய்மொழி.

_____________________________________________________

1. ‘அவன்தான் இவர்க்குச் செல்வமாவானோ?’ என்னும் வினாவிற்கு விடை
  அருளிச்செய்கிறார். ‘வைப்பாம்’ என்று தொடங்கி. இது, திருவாய்மொழி, 1.
  7 : 2.

2. ‘இப்படி நோவுபட்டார் உளரோ?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘பிராட்டியை’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ ராமா.
  ஆரண்ய.
60 : 35.

3. ‘கைவாங்குமளவாக’ என்றது, ‘என்செய்கேன் வல்வினையேனே’ என்று
  பாசுரப்பகுதியைத் திருவுள்ளம் பற்றி. ‘அவன் வந்து முகங்காட்டித்
  தேற்றுவிக்க’ என்றது, ‘வல்வினை தீர்க்குங் கண்ணனை’ என்று பாசுரத்தைத்
  திருவுள்ளம் பற்றி.