|
சம
சமீபத்தினின்றும் உண்டாயின;
அந்த விஷ்ணுவினிடத்தில் தானே எல்லா
உலகங்களும் லயமாகின்றன?’ என்னா நின்றாள். 1‘உலகங்களினுடைய
பிறப்பும் கிருஷ்ணனே, பிரளயமும் கிருஷ்ணனே என்னும் இவை பிரசித்தம்’ என்கிற இதில்
ஒருக்காலும் கலக்கமில்லை என்றபடி. நீறு செவ்வே இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும் -
நீற்றினைச் செவ்வே இட்டிருத்தலைக் கண்டால் மேல் நோக்கியிருக்கும் அத்துணை மாத்திரத்தையே
கொண்டு2 ‘மகா வராஹத்தை எடுத்த மஹாவிஷ்ணுவினால் தூக்கப்பட்டவள் ஆகிறாய்’ என்கிறபடியே,
என்றும் ஒக்க பகவானுடைய சம்பந்தம் மாறாத தேசத்தில் மண்ணைக்கொண்டு தரித்துப்
போருமவர்களாகக் கொண்டு மயங்கி, ‘இவர்கள் சர்வேசுவரன் அடியார்’ என்று ஓடாநிற்கும்.
3பிராயஸ்சித்தப் பிரகரணங்களிலே பிரஹ்மஹத்தி முதலான பாவங்களைப் பண்ணினார்க்குப்
பிராயஸ்சித்தமாக விதித்த திரவியத்தைத் தாமசபுருஷர்கள் தரித்துப் போந்தார்கள்; அந்தத்
திரவியத்தைப் பாராதே செவ்வை மாத்திரத்தைக் கொண்டு மயங்குகின்றாள் இவள்; அது பொடிபட்டுக்
கிடக்கிறது என்று அறிகின்றிலள்; சிறிது ஒப்புமை அமையுமாயிற்று இவள் மயங்குகைக்கு, இவளுடைய
மயக்கபுத்தி இருக்கிறபடி. ‘நன்று; அவர்கள் செவ்வே இடுவார்களோ?’ என்னில், அதுவும் அன்றிக்கே,
மசகப் பிராயராய் இருப்பவர்கள் தரிப்பார்களே அன்றோ?
நாறு துழாய் மலர்
காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் - வாசனையையுடைய திருத்துழாயைக் காணில், ‘உபய விபூதிகளையுமுடையனான
சர்வேசுவரன் ஐஸ்வரியத்துக்கு
_____________________________________________________
1. ‘‘விஷ்ணுவின் சமீபத்தினின்றும்
உண்டாயின’ என்பது போன்று கூறாது,
இங்கு, ‘கண்ணன் படைப்பு’ என்றால் என்?’ என்னும்
வினாவிற்கு விடை
அருளிச்செய்கிறார், ‘உலகங்களினுடைய’ என்று தொடங்கி. இது, பாரதத்தில்
ராஜசூயயாகத்தில்
வீடுமன் கூறியது.
2. நெடுமால் அடியார் தரிக்கிற
திரவியம் இன்னதென்று காட்டா
நின்றுகொண்டு, அவர்களாக மயங்கும் என்றருளிச்செய்கிறார்,
‘மஹாவராஹத்தை’ என்று தொடங்கி. இது, தைத்ரீய உபநிடதம்.
3. சாதாதபஸ்மிருதியில்
பிராயஸ்சித்தப் பிரகரணத்தில் கூறப்பட்டுள்ளதைத்
திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார்,
‘பிராயஸ்சித்த’ என்று தொடங்கி.
‘பிரஹ்மஹத்தி முதலான’ என்றது, திருடுதல், குருவின் மனைவியைப்
புணர்தல், கட்குடித்தல் முதலிய பாவங்களை. மஹாபாவங்களைச்
செய்தவர்கள் கழுவாய் நிமித்தம் செய்ய
வேண்டியவை என்றதனால்,
‘ஏனையோர் அவற்றைச் ‘செய்யலாகாது,’ என்பது கருத்து. அதனைத்
திருவுள்ளம்
பற்றியே ‘தாமச புருஷர்கள்’ என்று தொடங்கி
அருளிச்செய்கிறார். ‘பொடிபட்டுக் கிடக்கிறது’
என்றது, சிலேடை :
தூளியாய்க்கிடக்கிறது என்பதும், நீக்கப்பட்டுக் கிடக்கிறது என்பதும்
பொருள். ‘அதுவுமன்றிக்கே’ என்றது, முறைப்படி குறுக்காக
இடுதலுமன்றிக்கே’ என்றபடி, ‘மசகப்பிராயராயிருப்பவர்கள்’
என்றது,
அறிவில்லாதவர்களைக் குறித்தபடி. ‘நீற்றைத் திரியக் புண்டரமாகவும்,
மிருத்தை ஊர்த்துவ
புண்டரமாகவும் தரிக்கவேண்டும் என்று
அறியாதவர்கள்,’ என்றபடி. மசகம் - கொசு.
|